முன்பெல்லாம் பத்து தியேட்டர்ல படங்கள் ரிலீஸ் ஆகும். அது நூறு நாட்கள் ஓடும். இப்போது நூறு தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகுது. அதனால் பத்து நாட்கள்தான் ஓடுது. இரண்டும் ஒன்றுதான் என்கிறார் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் ஆடுகளம் படத்தின் இயக்குனர்.
இந்த அதிக தியேட்டர் குழப்பத்தில் நம்ம படம் ஹிட்டா? பிளாப்பா? என்றே புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆணானப்பட்ட ரஜினிக்கே அந்த குழப்பம் வந்திருப்பதுதான் ஆச்சர்யம். தமிழ்சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு சில தினங்களுக்கு முன் போன் அடித்தாராம் சூப்பர் ஸ்டார். எந்திரன் படம் இன்னும் எந்தெந்த தியேட்டர்களில் ஓடுது. எப்படி போயிட்டு இருக்கு. எத்தனை தியேட்டர்களில் படத்தை எடுத்திட்டாங்க என்பன போன்ற விபரங்களை கேட்டாராம். மறக்காமல் அவர் கேட்டது, 'படத்தை வாங்கியவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்களா?' என்பதுதான்! அதற்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் என்ன பதில் சொன்னார் என்பது இருக்கட்டும். இதிலிருந்து ஒன்று புரிகிறது நமக்கு.
சிலரது உயரம் இன்னும் அப்படியே இருப்பதற்கு காரணம் இதுபோன்ற விசாரணைகளும் அக்கறையும்தான். பணத்தை வாங்கினோமா, நிலத்துல இன்வெஸ்ட் பண்ணினோமா என்றிருக்கிற பல ஹீரோக்களுக்கு எப்படி புரியும் இதெல்லாம்? இந்த அளவுக்கு யாராலும் எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும் இன்றும் தன்னால், தன்னை சார்ந்தவர்களும், தனது படத்தை வாங்கி வெளியிட்டவர்களும் நஷ்டம் அடைந்து விட கூடாது. என்பதில் ரஜினி காட்டும் அக்கறையை எவர் பாராட்டாமல் இருக்க முடியுமா?. இவர் ஏற்கனவே தனது பாபா படத்தை வாங்கி வெளியிட்டவர்களில் நஷ்டம் அடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து இந்திய திரையுலகில் யாரும் செய்யாத நல்ல ஒரு செயலை செய்து அனைவருக்கும் எடுத்துகாட்டாக இருக்கிறார். யாருக்கு வரும் இப்படி ஒரு மனது இதனால் தான் இந்த கருப்பு வைரம் இன்னும் ஜோலித்துகொண்டு இருக்கிறது திரையுலகில்....
Rajni oru pakka businessman.rajni than padathin vetri kurithu aaraivathu avan kadamai.ithil avanai paarata ontrumillai.
ReplyDelete