அடை காத்த கோழியே முட்டைய உடைச்ச கதையாயிருச்சே இப்போ! விக்ரம் விக்ரம் என்று வார்த்தைக்கு வார்த்தை அவர் புகழ் பாடும் அமலா பால், இப்போது சர்வ நாடியும் ஒடுங்கிப் போயிருக்கிறார். காரணம், அவர் தந்த இரண்டாவது பட வாய்ப்பு இப்போது இல்லையாம்.
புதுசா ஜெயிச்சு வர்ற கட்சி, வந்த புதிதில் வாரியிரைக்கிற சலுகைகள் மாதிரிதான் இதுவும். தனது புதுப்படத்தில் அமலாவை கமிட் செய்த விக்ரம், அவர் நடிக்கும் அடுத்த படத்திலும் இவரையே நாயகியாக்கிக் கொள்வேன் என்று உறுதியளித்தாராம். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கவிருக்கிறார்.
ஆனால் சுசீந்திரன் மனசில் அமலா இல்லை என்பதுதான் ஷாக். இந்த படத்தில் வரப்போகும் இரண்டு நாயகிகளில் ஒருவராக அஞ்சலியை தேர்வு செய்துவிட்டார் அவர். இன்னொரு நாயகிக்காக மும்பை பக்கம் தேடலாம் என்று கூறிவிட்டாராம். லிங்குசாமி, பாண்டிராஜ் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்கள் ஒருபுறம் அமலாவுக்கு கிடைத்தாலும் விக்ரமின் இரண்டாவது படம் போச்சே என்ற வருத்தமும் இருக்கிறதாம்!
No comments:
Post a Comment