உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அவதரிக்கவுள்ள "நண்பேன்டா" படத்தின் டைட்டில் "ஒரு கல் ஒரு கண்ணாடி"(ஓ.கே. ஓ.கே.) என்று மாறியுள்ளது.
"சிவா மனசுல சக்தி", "பாஸ் என்ற பாஸ்கரன்" போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் ராஜேஷ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமது மூன்றாவது படத்தினை இயக்க இருக்கிறார். ராஜேஷின் முந்தைய படத்தை போன்று இந்தபடமும் முழுக்க முழுக்க காமெடி படமாகும். தமிழில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.
"நண்பேன்டா" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தலைப்பு "ஒரு கல் ஒரு கண்ணாடி"(ஓ.கே. ஓ.கே.) என்று மாறியுள்ளது. படத்தின் தலைப்பை மாற்றியதற்கான காரணம் குறித்து இயக்குநரிடம் கேட்டதற்கு, இந்த தலைப்புதான் ரசிகர்களிடம் சீக்கிரத்தில் சென்று சேரும் என்று கூறுகிறார். படத்தின் இந்த தலைப்பு ராஜேஷின் முந்தைய படமான சிவா மனசுல சக்தி யில் இடம்பெற்ற ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற பாடல் ஆகும். யுவன்சங்கர் ராஜா இசையமைத்த இந்தபாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
ஓ.கே. ஓ.கே. படத்தில் யுவனுக்கு பதிலாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். யுவன் மாற்றப்பட்டதற்கு தனிப்பட்ட எந்த பிரச்சனையும் காரணம் இல்லை. உதயநிதி தான் ஹீரோவாக நடிக்கும் முதல்படத்தில் ஹாரிஸ் தான் இசை அமைக்க வேண்டும் என்று முன்பே கூறியிருந்தார், ஆகையால் தான் யுவன் மாற்றப்பட்டுள்ளார்.
ஒ.கே .ஒ.கே என்பது ஆங்கில பெயராச்சே அப்போ படத்துக்கு வரிவிலக்கு இல்லையா ? அல்லது இது பெரிய இடத்து சமாச்சாரமா? அல்லது எப்படியும் படம் முடிந்து வெளிவருவதற்கு முன்னாடி ஆட்சி மாறிடும் அப்போ கலைஞர் கொண்டு வந்த இந்த வரிவிலக்கும் விலக்கி கொள்ளப்படும், என்ற தொலைநோக்கு பார்வையில் இப்பவே ஆங்கில பேரு வச்சிட்டாங்களா...?
Sariya Sonneenga ANNA
ReplyDelete