பிரையன் லாரா... கிரிக்கெட் உலகில் டான் பிராட்மேனை விட பிரபலமான பெயர் இது. உலக கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்த வீரர். ரன் மெஷின் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம்.
மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடிய இவர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்துள்ளார்.
இன்று ஐபிஎல் போட்டிகளுக்கு ஏலம் துவங்கியுள்ள நிலையில் இவரை இதுவரை எந்த அணி்யும் ஏலம் கேட்கவில்லை.
சாதாரண வீரர்களைக் கூட கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்துள்ள ஐபிஎல் அணிகள், சாதனை வீரரான லாராவை கண்டுகொள்ளாததன் பின்னணியில் பிசிசிஐயின் அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
லாரா இதற்கு முன் கபில்தேவ் உருவாக்கிய இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) கில் விளையாடியவர். இப்போதுதான் முதல் முறையாக ஐபிஎல்லுக்கு வந்துள்ளார். ஐசிஎல்லில் விளையாடியவர்களைப் புறக்கணித்து வந்த பிசிசிஐ, இப்போது அவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஆனாலும் இந்த வீரர்களுக்கு அதிக முக்கியத்தும் இல்லாமல் பார்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளின் இன்னொரு சாதனை வீரரான கிறிஸ் கெயிலையும் யாரும் ஏலம் கேட்கவில்லை.
தென்னாப்பிரிக்காவின் ஹர்ஷ்லே கிப்ஸையும் யாரும் ஏலம் கேட்கவில்லை.
கண்டுகொள்ளப்படாத கங்குலி!
கடந்த ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலியையும் இந்த சீஸனில் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
கங்குலியும் சாதாரண வீரரல்ல. பல சாதனைகள் செய்தவர். இந்திய அணியின் கேப்டனாக நீண்ட காலம் பணியாற்றிவர். ஆனால் முதல் சுற்று ஏலத்தில் இவரை யாருமே கேட்கவில்லை.
ஆரம்பத்தில் இவரது விலை 2 லட்சம் டாலராக இருந்தது. ஆனால் கங்குலி திடீரென தனது விலையை 4 லட்சம் டாலராக்கிவிட்டதால், அவரை எடுக்க திட்டமிட்டிருந்த புனே அணி திட்டத்தைக் கைவிட்டது. இவர் முன்பு விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இவரை வேண்டாம் என வெளிப்படையாகவே கூறிவிட்டது.
No comments:
Post a Comment