இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளுடன் ஆன போர் இறுதி கட்டத்தை அடைந்ததை தொடர்ந்து தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிட தமிழ் இளைஞர்கள் அச்சமும் பீதிதியும் அடைந்துள்ளனர். அப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டணி கட்சி தமிழர்களிடையே வலுவாக உள்ளது. இருந்தும் அக்கட்சி இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர்.
ஏனெனில், அப்பகுதியில் மிரட்டல் மற்றும் கடத்தல், கொலை போன்ற சம்பவங்களில் ரவுடிகள் ஈடுபடுவதே இதற்கு காரணம். இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பான எம்.பி. சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்பாணத்தில் தற்போது ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து விட்டது. அங்கு ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பிரமுகர்களை கொலை செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 11-ந் தேதி சங்கானை என்ற இடத்தில் இந்து கோவில் பூசாரி கொல்லப்பட்டார். அவரை தொடர்ந்து 30 வயது மதிக்கத்தக்க 9 இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.
ஆனால், சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. எனவேதான் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட தமிழ் இளைஞர்கள் பயப்படுகின்றனர். எங்கள் உயிருக்கு உங்களால் பாதுகாப்பு தர முடியுமா? என எதிர்க் கட்சி தலைவர்களை கேட்கின்றனர். அதே நேரத்தில் ஆளுங் கட்சி சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் தங்களின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் வராது என நம்புகின்றனர்.
No comments:
Post a Comment