செல்வராகவனுக்கும் யுவனுக்கும் ஏற்பட்ட பிரிவுக்கு காரணம் பணப் பிரச்சனைதான். சில பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சேர்ந்துவிட்டார்கள் ஆனால் இப்போது செல்வராகவனிடம் இருந்து பிரிந்து இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் தான் பிரிவதற்கான காரணம் என்னவென்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.ஜி.வி.பிரகாஷ்.
செல்வராகவன் இயக்கிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் படத்திலிருந்து நீங்கள் ஏன் விலகினீர்கள் என்று கேட்டபோது அவர் சொல்லியிருக்கும் பதில், செல்வராகவனின் கொடுக்கல் வாங்கல் குணத்தை பறை சாற்றியிருக்கிறது. நானும் அவரும் நண்பர்களாகவே பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். அவர் படத்தில் நான் இசையமைக்காமல் போனதில் வருத்தம் இல்லை. அவரிடமிருந்து பேமென்ட் சரியாக வராது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இவரால் புறக்கணிக்கப்படும் இன்னொரு படைப்பாளி வசந்தபாலன். என்னை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அந்த நன்றி எப்போதும் எனக்குள் உண்டு. ஆனால் நானும் அவரும் பிரிந்தது பிரிந்ததுதான் என்கிறார்.
இப்படி பளிச் பளிச்சுன்னு பேசுறதுதான் பக்குவ குறைச்சலோ?
No comments:
Post a Comment