கோவையை அடுத்த பெரிய தடாகம் அருகே அனுவாவி சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இது கோவை மாவட்டத்தில் உள்ள மலைக்கோவில்களில் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலின் அடி வாரத்தில் நுழைவு வாயில் முன்பு கடந்த 2 நாட்களாக மதுரவேல் என்ற சினிமா படிப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இளம் பெண்கள் கவர்ச்சி உடை அணிந்து நடனமாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. நாள் முழுவதும் திருப்பந்திரும்ப அந்த காட்சியையே படமாக்கினர். இது கோவிலுக்கு வரும் பக்தர்களை வேதனையடையச்செய்துள்ளது.
கவர்ச்சி நடன பாடல் காட்சியை கோவில் நுழைவு வாயில் முன்பு படமாக்குவதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் கோவிலின் அடிவாரம் வனப்பகுதியை சேர்ந்தது. யானைகள் உள்பட வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியாகும். வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையிலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாகவும், மனதை கெடுக்கும் வகையிலும் நடைபெறும் படப்பிடிப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பிடிப்பு நடத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார்களா? என்பது தெரியவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பாக வற்புறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment