கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்கி கொல்லும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் பாண்டி சமீபத்தில் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்ககோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், கடிதம் எழுதினார். டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனத்தை தெரிவித்தது. இலங்கை தூதரும் இனி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது என்று உறுதி அளித்தார். இந்தநிலையில் சிங்கள கடற்படை கொடூர தாக்குதலுக்கு வேதாரண்யம் மீனவர் ஒருவர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.
வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான விசைபடகில் புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன் (வயது 45), ஜெயக்குமார் (28), அவரது தம்பி செந்தில் (26) ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலையில் கடலுக்கு சென்ற இந்த மீனவர்கள் 3 பேரும் கோடியக்கரை பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில் இவர்கள் படகை நோக்கி சிங்கள கடற்படையினரின் படகு ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது.
நேராக வந்த அந்த படகு தமிழக மீனவர்கள் படகு மீது மோதி நின்றது. அந்த படகில் 10-க்கும் மேற்பட்ட சிங்கள கடற்படையினர் துப்பாக்கிகளுடன் இருந்தனர்.அவர்கள் தமிழக மீனவர்களை மிரட்டினர். பிறகு 3 தமிழக மீனவர்களையும் கடலில் குதிக்கும்படி கூறினார்கள். உயிருக்கு பயந்து ராஜேந்திரனும், செந்திலும் கடலில் குதித்து விட்டனர். ஜெயக்குமார் கை ஊனமுற்றவர். சரியாக நீச்சலும் தெரியாது. ஜெயக்குமார் கடலில் குதிக்காமல் தனது படகிலேயே பயத்தில் நடுங்கிக்கொண்டு நின்று கொண்டு இருந்தார்.
உடனே ஒரு சிங்கள கடற்படை வீரர் தமிழக மீனவர் படகில் ஏறினார். அந்த படகில் இருந்த கயிற்றை எடுத்து ஜெயக்குமார் கழுத்தை இறுக்கினார். பிறகு ஜெயக்குமாரை கடலில் தள்ளினார். கடலில் தத்தளித்த அவரை கயிற்றை பிடித்து இழுத்து இறுக்கி துடிதுடிக்க கொடூரமாக கொன்றார். இந்த செயலையை பார்த்த மற்ற 2 மீனவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த கொடூர செயலை அரங்கேற்றிவிட்டு சிங்கள கடற்படை படகு அங்கிருந்து விரைந்து சென்று மறைந்தது. உடனே ராஜேந்திரனும், செந்திலும் சுதாரித்துக் கொண்டு ஜெயக்குமார் உடலை தூக்கி தங்கள் படகில் போட்டனர். தனது கண்முன்பே அண்ணன் ஜெயக்குமார் கொல்லப்பட்டதை நினைத்து செந்தில் கதறினார்.
பிறகு அவர்கள் கரை திரும்பினர். இன்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் படகு புஷ்பவனத்தில் கரை சேர்ந்தது. இதற்கிடையில் புஷ்பவனம் கிராமத்தில் இந்த தகவல் பரவி விட்டதால் கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு நின்றனர். ஜெயக்குமாரின் பிணத்தை பார்த்து அவரது மனைவி முருகேஸ்வரி கதறி அழுதார். மற்ற மீனவர்கள் சிங்கள கடற்படையினரை கண்டித்து கோஷம் போட்டனர்.
இதனால் கடற்கரையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர், கிï பிராஞ்ச் போலீசாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகளும் அங்கு விரைந்து உள்ளனர். உயிர் தப்பிய மீனவர்கள் ராஜேந்திரன், செந்தில் ஆகியோர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புஷ்பவனம் மீனவர்கள் 300 பேர் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தினார்கள். மீனவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதால் புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தமிழக மீனவன் உயிர் என்ன வெங்காயத்தை விட மலிவா போச்சா ..? எனது இப்போதைய கவலையும் கண்டனமும் இந்திய அரசை பற்றி அல்ல. எனது கவலை , கண்டனம் அனைத்தும் தமிழக மீனவர்களிடம் தான். எனக்கு தெரிந்த வரை உலகில் உள்ள இனங்களில் மீனவன் தான் தைரியத்திலும், பலத்திலும் சிறந்தவன் . எதற்கும் அஞ்சாதவன். நீ இழந்த உயிர்கள் எத்தனை எத்தனை ...இன்னும் இழக்க வேண்டுமா உயிர்களை ...? திரைப்படத்தில் (ஆடுகளம் ) வரும் ஒரு சின்ன வசனத்திற்கே ரோசத்தோடு பொங்கி எழும் நீங்கள் உங்கள் சிங்கள ராணுவத்தால் எடுக்கபடும் போது பொங்கி எழாதது ஏன்?. உங்கள் மீனவ அமைப்புகளை ஒன்று கூட்டுங்கள் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மீனவர்களும் அவர்களது படகில் புறப்படுங்கள் இலங்கை நோக்கி யார் தடுத்தாலும் நிக்காமல் புறப்படுங்கள் அப்போது வரும் இந்திய அரசு உங்களுடன் பேச அப்போது கேளுங்கள் "இன்னும் ஒரு தமிழக மீனவன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டால் இலங்கை மீது போர் தொடுபீர்களா ? அல்லது எங்களை இலங்கை செல்ல அனுமதியுங்கள்." என்று தைரியமாக கேளுங்கள். இதுவும் முடிய வில்லையா உங்களுக்கு வேறு ஒரு நல்ல உடனடி பலனளிக்கும் ஆலோசனை சொல்கிறேன். பக்கத்தில் வாருங்கள் காதை கொடுங்கள் இது மிகவும் ரகசியமானது. (யாருக்கும் தெரிய வேண்டாம் நம்ம உள்ளாடியே இருக்கட்டும்) .'பேசாமல் நீங்கள் மீன் பிடிக்க செல்லும் பொது உங்களுடன் ஒரு மலையாளியை (கேரளா காரனை ) அழைத்து செல்லுங்கள் அவனை சிங்கள ராணுவம் போட்டு தள்ளட்டும். அதன் பிறகு பாருங்கள் இந்திய அரசு ஊடுர ஓட்டத்தை. (அட ரோசம் கேட்ட தமிழனே அப்போது தான் உன் நிலைமையும் உனக்கு புரியும்). போங்கடா அரசியல்வாதிகளே .... நீங்களும் உங்கள் தமிழ் பற்றும்...
இன்னும் ஒன்று சொல்லணும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேரை இதை போன்று சிங்கள ராணுவம் சுட்டு கொன்ற போது தமிழகத்தில் என்ன நடந்தது என்பதை நினைவு படுத்தி பாருங்கள். தமிழக அரசின் பலத்த கண்டனம், ஒரு நாள் பள்ளி கல்லூரிகள் அடைப்பு , தொடர் போராட்டங்கள் இப்படி தமிழகமே சும்மா அதிர்ந்தது. ஏன் ? எப்படி சாத்தியமாயிற்று அது மட்டும். யோசியுங்கள் ...அதன் பின்னணியில் இருந்தது கிறிஸ்தவ அமைப்புகள். அவர்களை பாரட்ட வேண்டும். நான் நினைக்கிறேன் ராமேச்வரத்தில் இறக்கும் மீனவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று அதனால் தான் இப்படி நடக்கிறது என்று. இந்து, இந்து என்றும் ராமர்கோவில் என்று வெத்து வெட்டு தனமாக பேசிக்கொண்டு இருக்கும் இந்து அமைப்புகள் எல்லாம் என்ன பண்ணுகிறார்கள் வாயில் கையை வைத்து கொண்டா இருக்கிறார்கள்? ...?
குறிப்பு: நான் இந்து வெறியன் என்று நினைக்க வேண்டாம். ..உண்மையில் நான் இந்து மதத்தை சார்ந்தவன் அல்ல . ஆனால் அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் மதிப்பவன். என்னுடைய ஆதங்கம் எல்லாம் ஒரு கிறிஸ்தவ மீனவன் மீது கிறிஸ்தவ அமைப்புகளுக்கு இருக்கும் அக்கரையில் பாதி அளவுக்கூட இந்து மீனவன் மீது இந்து அமைப்புகளுக்கு இல்லை என்றால் எதுக்குடா அமைப்புன்னு ஒன்னு வச்சுக்கிட்டு திரியுறீங்க பேசாமல் போர்த்திகிட்டு தூங்குங்கடா....
No comments:
Post a Comment