தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் “ஸ்லம் டாக் மில்லியனர்” ஆங்கிலப் படத்துக்காக உலகின் மிக உயரிய 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றார். இதுதவிர கோல்டன் குளோப் கிராமி விருது உள்பட பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது சர்வதேச அளவில் கிரிஸ்டல் விருது கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோசில் வருகிற 26-ந்தேதி தொடங்கும் உலக பொருளாதார மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது வழங்கப்படுகிறது. சர்வ தேச அளவில் கலை மற்றும் இசையில் சாதனை படைத்ததற்காக அவர் இந்த விருதை பெறுகிறார்.
மாநாட்டில் 11 நாடுகளில் இருந்து தொழில் அதிபர்கள் அரசு பிரதிநிதிகள், சிறந்த கலைஞர்கள், சாதனையாளர்கள் என 2500 பேர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஆனந்சர்மா, கமல்நாத், பிரபுல் படேல், திட்ட கமிஷன் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா மற்றும் இந்திய தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார். மாநாடு வருகிற 26-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது
No comments:
Post a Comment