உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப்போட்டி நடக்கிறது. உலக கோப்பை போட்டியில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
“ஏ” பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகளும், “பி” பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றன.
உலக கோப்பை போட்டிக்காக 15 பேர் கொண்ட அணி வீரர்களை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றன. வெஸ்ட் இண்டீஸ், கனடா, தவிர மற்ற நாட்டு அணிகள் நேற்று வரை அறிவிக்கப்பட்டு இருந்தன. இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது.
டாரன்சமி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிஸ்கெய்ல் கடந்த ஆண்டு கேப்டன் பதவியை இழந்தார். அவரது கேப்டன் பதவியை டாரன்சமி பெற்றார். தற்போது உலக கோப்பையிலும் அவருக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்ட சர்வான் உலககோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். புதுமுக வீரர் ஆந்த்ரே ரஸ்சலுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:-
டாரன்சமி (கேப்டன்), கிறிஸ்கெய்ல், வென்ய் பிராவோ, டாரன் பிராவோ, போலர்ட், சர்வான், தேவன் சுமித், சுலைமான்பென், நிகிட்டா மில்லர், கால்டன்பக் (விக்கெட் கீப்பர்) ஆந்த்ரே ரஸ்சல், ராம்பால், ரோச், சந்தர்பால், அட்ரியன் பரத்.
No comments:
Post a Comment