எல்லாவரும் காவலன் , ஆடுகளம்ன்னு பார்க்க போறாங்க என்னடா இது இப்படி எல்லாவரும் இந்த ரெண்டு படத்துக்கு போனா மற்ற பட தயாரிப்பாளர்கள் என்ன பண்ணுவது என்ற நல்ல மனசில் (நம்புங்கங்க) சிறுத்தை பார்க்க போனேன். படம் ஆரபிச்சாங்க முதல் காட்சியே த்ரில்லிங்கா இருக்கேன்னு பார்த்தா படம் வேறு பக்கமா போகிடுசுங்க ஆனா, படத்தில் கார்த்தி கதாநாயகன்னு சொன்னாங்க. நானும் தேடுறேன்... தேடுறேன் கார்த்தியை காணோம். அந்த அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறிட்டாரு கார்த்தி ராக்கட் ராஜா கார்த்தி. இது இருக்கட்டும் நாம முதலில் கதைய பார்ப்போம்
கதை
ஆந்திர மாவட்டம் தேவிபட்டினத்தை ஒரு ரவுடிக் குடும்பம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. யாராவது வந்து நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்கும்போது மீசையை முறுக்கிக் கொண்டு, அழகிய பெண் குழந்தையோடு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (டிஎஸ்பி கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை கதிகலங்க வைத்து மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார். ஆனால் வில்லன் தாக்குதலில் படுகாயம் அடையும் டிஎஸ்பி சென்னைக்கு சிகிச்சைக்காக வருகிறார்.
சென்னையைக் கலக்கும் 'அஜக் மஜக்' திருடன் ராக்கெட் ராஜா (2வது கார்த்தி). காட்டு பூச்சியுடன் (சந்தானம்) சேர்ந்து திருடித் திருடி ஜாலியாக இருக்கிறார். இந்த இடத்தில் ஹீரோயினை அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். சென்னையில் இரண்டு கார்த்திகளும் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது சரியான கலாட்டா, அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள.
ரத்கார்த்தி முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் சிறுத்தை. டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியன் கதாபாத்திரம் கம்பீரமாக இருந்தது. ஆனால், வசன உச்சரிப்பும் சரி நடிப்பு அந்த கம்பீரமும் சரி அச்சு அசலாக சிங்கம் சூர்யாவை தான் நினைவு படுத்தியது. நடிப்பில் கூட சூர்யா தெரிகிறார் (டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மட்டும்).
ராக்கெட் ராஜா, ரத்தினவேல் பாண்டியனாக மாறி வரும்போது கார்த்தி நடக்கும் நடை ரஜினிகாந்த் மூன்று முகத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டு நடப்பதை நினைவூட்டியது..
ரத்னவேல் பாண்டியன் கிடுகிடு என்றால் ராக்கெட் ராஜா சடுகுடு. அந்தத் திருடன் கதாபாத்திரத்தில் கார்த்தி திரையரங்கையே குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். நம் கண்ணுக்கு கார்த்தி தெரிய மறுக்கிறார் ராக்கெட் ராஜா தான் தெரிகிறார். அந்த அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்.
ராக்கெட் ராஜாவுடன் காட்டுப்பூச்சி என்ற பெயரில் சந்தானம் செய்யும் காமெடியில் திரையரங்கே குலுங்குகிறது. பாடல்கள் சுமார் ராகம் தான். தமன்னா சும்மாதான் வந்து போகிறார்.
என்னை கவர்ந்தவை
இந்த படத்தை பொறுத்தவரை கார்த்தி காமடி நடிப்பில் பின்னி பெடலெடுக்கிறார். படத்தின் முதுகெலும்பே ராக்கெட் ராஜா தான். பல இடங்களில் இயக்குனரின் திறமை தெரிந்தாலும் குறிப்பாக ராக்கெட் ராஜா வசம் இருக்கும் டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியனின் குழந்தை செல்லும் லாரியை துரத்திக்கொண்டு தலை தெறிக்க ஓடி அந்த லாரியை பிடித்து தொங்கும் கார்த்தியிடம் டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியனின் குழந்தை ' அப்பா இந்த விளையாட்டு நல்ல இருக்கு திரும்பவும் விளையாடலாமா?" என்று கேட்கும் இடம் ரசிக்கவைகிறது. அடுத்து டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியன் வில்லனின் மகனை சிறைக்கு கைது பண்ணி அழைத்து செல்லும் பொது வில்லன் " கதவை இழுத்து மூடுங்கடா..." என்று சொன்னதும் டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியன் இப்போது அவனாகவே கதவை திறக்க சொல்லுவான் பாரு " என்று சொல்லி கொண்டு வில்லனின் மகனை காரின் முன்பக்கம் கட்டி வைத்து காரை கிளப்பியதும் வில்லன் மகனுக்கு அடிப்பட்டிடும் என்ற பயத்தில் கேட்டை திறந்கடா " என்று சொல்வதும் வித்தியாசம். அதை போன்று வில்லனால் மனைவி பிள்ளைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டு எரிந்து கொண்டு இருக்கும் போது பத்திரிகை காரனான கணவன் அந்த தீயை அணைப்பதற்கு தண்ணீர் எடுத்து தீயை அணைக்க முயலும் போது வில்லனின் தம்பி அந்த பத்திரிகைகார கணவனிடம் தன் காலில் இருக்கும் சேரை கழுவிட்டு உன் குடும்பத்தை காப்பாத்து டா " என்று சொல்லி தன் காலை கழுவ வைக்கும் இடம் வில்ல தனத்தின் உச்சகட்டம்.
குறை
இடைவேளைக்கு முன்பு வரை கலகலப்பாக செல்லும் படம் அதன் பிறகு டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியனின் வாழ்க்கையை காட்டிய பிறகு வரும் காட்சிகள் வேறு படங்களை ஞாபகப்படுத்துகிறது. ராக்கெட் ராஜா , டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியனாக மாறி வில்லனை பழிவாங்குவதற்காக செய்யும் சேட்டைகள் சூர்யாவின் 'வேலு' படத்தை நினைவு படுத்துகிறது. அந்த காட்சிகள் நம்மை பத்து வருடத்திற்கு முந்தய சினிமாவிற்கு அழைத்து செல்கிறது. டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியன் தலையில் அடிப்பட்டதால் அவனுக்கு அடிக்கடி தலையில் வலி வருகிறது அப்படி வலி வரும் போதெல்லாம் தலையை பிடித்து கொண்டு வலி தாங்காமல் துடிப்பது அப்படியே விஜயகாந்தின் 'செந்தூரபூவே' படத்தை நினைவு படுத்துகிறது.அந்த வேலையை முந்தய காட்சிகளில் சந்தானத்தை வைத்தே நமக்கு அந்த நினைவு வர வைத்திருக்கிறார்கள்.
படம் பற்றிய எனது பொதுவான கருத்து
மொத்தத்தில் நம்ம ராகெட் ராஜாவுக்காக படம் பார்க்கலாம் . நக்கல் நையாண்டி தனங்களை ரசிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ராகெட் ராஜா (பார்த்தீங்களா நானும் பட பேரை மறந்திடேன் )
இது எனது முதல் திரை விமர்சனம் உங்களின் கருத்தை சொல்லுங்கள்.
முதல் கமெண்ட் நானா…?
ReplyDeleteநல்ல ரசனையான விமர்சனம். படம் பார்க்க தூண்டுகிறது. மிக்க நன்றி நன்பா. காவலன் விமர்சனம் கிடைக்குமா?
ReplyDelete@ISAKKIMUTHU
ReplyDelete350-க்கும் அதிகமானவங்க படிச்சிருக்காங்க நண்பா... ஆனால் யாருமே விமர்சனம் போடல்ல நீங்க மட்டும் தான் கமெண்ட் போட்டு இருக்கீங்க. உங்களுக்காகவே காவலன் விமர்சனம் எழுத முயல்கிறேன். நன்றி நண்பா...