திரைப்பட இயக்குனர் சரண் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அடுத்ததாக இந்தியில் சல்மான்கானை வைத்து அட்டாகாசம் படத்தை ரீமேக் பண்ணப் போகிறேன். அஜீத் நடிக்கும் மங்காத்தா, பில்லா-2 படத்துக்கு பின்னர் அவரை வைத்து ஒரு ஜனரஞ்சகமான படம் இயக்குவேன்.
கிராமத்து கதைகளை மையமாக வைத்து படம் எடுக்கும் நோக்கம் இல்லை. என்னை பொறுத்தவரை எனக்கென்று ஒரு பாணி உள்ளது. அந்த பாணியில்தான் படம் எடுப்பேன்.
தமிழ்சினிமாவில் முன்பு 3 வருடத்திற்கு ஒருமுறை டிரண்டு மாறியது. இப்போது 6 மாதத்திற்கு ஒருமுறை மாறுகிறது. அதனால் இந்த மாதிரி படம்தான் நிரந்தரமாக ஓடும் என்று கூறமுடியாது.
திருட்டு வி.சி.டியை ஒழிப்பது கடினம். எனவே அதை சட்டப்பூர்வம் ஆக்கிவிட்டால் தயாரிப்பாளருக்கு எதாவது வருமானம் கிடைக்கும். இப்போது டி.வி.டியில் படம் பார்ப்பதற்கு என்றே ஒரு குரூப் இருக்கிறது. அவர்களை தியேட்டர் பக்கம் கொண்டு வருவது சாத்தியம் இல்லை.
வெளிநாடுகளில் டி.வி.டி. ஆடியன்ஸ்க்கு என்றே இப்போது படம் தயாரிக்கப் படுகிறது. என்னை பொறுத்தவரை மனசுக்கு பிடித்த நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதே ஆசை.
ரஜினியை வைத்து படம் இயக்குவது சவாலானது. அதில் எல்லாதரப்பு ஆடியன்சையும் திருப்திபடுத்த வேண்டும். ரஜனியே 3 வருடத்திற்கு ஒரு முறைதான் படம் நடிக்கிறார்.
அப்போது யார் படத்தில் நடிப்பது என்று அவர்தான் தீர்மானிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். அதன் பின்னர் நடிகர்களை தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்து வருகிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு.
அவர் தனது தனிப்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார். நானும் அவரது டி.வி.யை பார்ப்பதில்லை என்றார். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? என்று கேட்டபோது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
நடிகர்களில் நல்ல அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளிலும் நடிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவை ஒதுக்கி தமிழக அரசியலை பார்க்க முடியாது என்றார். பேட்டியின்போது கவிதாலயம் ராமலிங்கம் உடனிருந்தார்.
No comments:
Post a Comment