இந்தியா வுக்குள் ஊடுறுவி, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்தியப் பணியாளர்களுக்கு சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு மிக மோசமான நிலையில் உள்ளதை இது நிரூபிப்பதாக உள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பிராந்தியத்தில், இந்திய எல்லைப் பகுதிக்குள் அடிக்கடி சீன ராணுவம் ஊடுறுவி வருகிறது. இதைத் தடுக்க இதுவரை இந்தியா தீவிர முயற்சிகள் எதையும் எடுத்தது போலத் தெரியவில்லை. இதுதொடர்பாக சீனத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை மட்டுமே நடத்தி வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாத காலகட்டத்தில் லடாக் பிராந்தியத்தில், லே மாவட்டத் தலைநகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் சீன எல்லையையொட்டியுள்ள ஒரு கிராமத்திற்குள் சீன ராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் நுழைந்துள்ளனர்.
பின்னர் அங்கு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்து வந்த பயணிகளுக்கான நிழற்குடை அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டுள்ளனர். பின்னர் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த கான்டிராக்டரை அழைத்து, இந்தப் பணியை தொடரக் கூடாது, நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து போய் விட்டனராம்.

No comments:
Post a Comment