Sunday, January 9, 2011
ரூ.41 ஆயிரம் கடன்! இளம் நடிகைக்கு நோட்டீஸ்!!
இளம் நடிகை ஒருவர் சக நடிகரிடம் ரூ. 41 ஆயிரம் கடன் பெற்று விட்டு திருப்பிக் கொடுக்காததால், அந்த பணத்தை 3 நாட்களுக்கும் திருப்பித் தரும்படி நடிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லு படத்தில் நடித்திருப்பவர் நடிகை பாக்யாஞ்சலி. இவர் உன்னையே காதலிப்பேன் படத்தில் நடித்தபோது, அதே படத்தில் வில்லனாக நடித்த வேலு என்ற நடிகருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் அடிப்பபையில் அவ்வப்போது வேலுவிடம், பாக்யாஞ்சலி பணம் பெற்று வந்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம். பணத்தை திருப்பிக் கேட்ட வேலு மீது கடந்த சில வாரங்களுக்கு முன் பாக்யாஞ்சலி போலீசில் புகார் செய்தார். வேலு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் வேலு சார்பில் அவரது வக்கீல் லிங்கேஸ்வரன், நடிகை பாக்யாஞ்சலிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
உன்னையே காதலிப்பேன் என்ற படத்தில் நீங்களும், வேலுவும் சேர்ந்து நடித்தீர்கள். அந்த படப்பிடிப்பின்போது வேலுவிடம் நீங்கள் நெருக்கமாக பழகி இருக்கிறீர்கள். உங்கள் காதலை அவரிடம் வெளிப்படுத்தும் அளவுக்கு நெருங்கி இருக்கிறீர்கள். ஆனால் காதல் வார்த்தைகளை வேலு ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். உங்களை அவர் தனது நெருக்கமான நண்பராகத்தான் நினைத்திருக்கிறார். இந்த நெருக்கத்தை பயன் படுத்திக்கொண்டு பல்வேறு தருணங்களில் வேலுவிடம் இருந்து கைமாத்துக் கடன் வாங்கினீர்கள். சில நேரங்களில் அவற்றை திருப்பி செலுத்தினீர்கள். இறுதியில் ரூ.40 ஆயிரம் தொகையை வேலுவிடம் 4 தவணைகளில் பெற்று, 12 -8-10 தேதியிட்ட கடன் பத்திரமும் கொடுத்துள்ளீர்கள். 12 சதவீத வட்டியுடன் கடனை திருப்பி செலுத்தவும் உறுதி அளித்துள்ளீர்கள். ஆனால் திடீரென்று வேலுவை நீங்கள் புறக்கணித்தீர்கள். அதற்கான உங்களின் தனிப்பட்ட காரணங்களை விவரிக்க விரும்பவில்லை. செக்ஸ் கொடுமைகள் செய்ததாக போலீசில் புகார் கொடுத்ததோடு, ஆட்களையும் வைத்து மிரட்டினீர்கள்.
ரூ.40 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்காக நீங்கள் போட்ட நாடகம் அது என்பது வேலுவுக்கு தெரியவந்தது. நீங்கள் பலரிடம் கடன் வாங்கிவிட்டு கடைசியில் அவர்களை ஏமாற்றிச் செல்லும் ரகம் என்பது வேலுவுக்கு பிறகுதான் தெரியவந்தது. வாங்கிய கடனுக்கான வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ.41 ஆயிரத்து 600 தொகையை நீங்கள் தர வேண்டும். இன்னும் 3 நாட்களுக்குள் இந்த தொகையை தராவிட்டால் உங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment