முழுக்க முழுக்க திரைப்பட கல்லூரி மாணவர்கள் சேர்ந்து "உயிரின் எடை 21 அயிரி" என்ற படத்தை உருவாக்கியுள்ளனர்.
1999ம் ஆண்டில் படித்த தமிழ்நாடு திரைப்பட கல்லூரி மாணவர்கள் சேர்ந்து இயக்கி, நடித்து இந்தபடத்தை உருவாக்கியுள்ளனர். இந்தரஜித் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இவரே படத்திற்கு இசையமைத்தும், தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் வினிதா நடிக்கிறார். இவர்களுடன் பிரபல மலையாள நடிகர் திலகன் நடிக்கிறார். ஜே.பி.ராஜ செல்வா ஒளிப்பதிவு செய்ய, கிருத்திகா என்ற பெண், எடிட்டிங் செய்துள்ளார். டி.டி.எஸ்.சவுண்ட் மிக்சிங்கை சிவக்குமார் என்பவரும், பரணிதரன் பாடல் மிக்சிங்கையும் செய்துள்ளனர்.
படத்தின் கதை குறித்து இந்திரஜித் கூறுகையில், "ஒரு ரவுடியின் வாழ்க்கை, வழக்கமான சினிமா பதிவுகள் இல்லாமல் படத்தை இயல்பாக பதிவு செய்திருக்கிறோம்" என்கிறார். மேலும் இரக்கமற்ற கொலை செய்வதை மட்டும் தொழிலாக கொண்டு நம்மை சுற்றி வாழ்ந்து வரும் ஒரு வன்முறையான கொடூர கூட்டத்தை இந்த படத்தில் எடுத்துக்காட்டியுள்ளனர்.
"ஊமைவிழிகள்", "புலன் விசாரனை", "கேப்டன் பிரபாகரன்", "செந்தூர பூவே", "இணைந்த கைகள்" போன்ற வெற்றி படங்களை உருவாக்கிய திரைப்பட கல்லூரி மாணவர்கள் நீண்ட இடைவேளிக்கு பிறகு, "உயிரின் எடை 21 அயிரி" என்ற படத்தை இயக்கியுள்ளனர். முந்தைய படங்களை போன்று இந்தபடமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிகையோடு உள்ளனர்.
No comments:
Post a Comment