நடிகர் விஜய்யின் அப்பா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் சட்டப்படி குற்றம் படத்தில் பத்திரிகை அலுவலக எரிப்பு காட்சியொன்று இடம்பெறுகிறது. இந்த படத்தில் நாட்டு நடப்புகளை அப்படி அப்படியே உரித்து வைக்கிற மாதிரி பல காட்சிகள் இடம் பெறும் என்று ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை உறுதிபடுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான
செய்தியொன்றில், சட்டப்படி குற்றம் படத்தில் ஸ்பெக்டரம் விவகாரம் சூட்டை கிளப்பும் என்று கூறப்பட்டிருந்தது.
செய்தியொன்றில், சட்டப்படி குற்றம் படத்தில் ஸ்பெக்டரம் விவகாரம் சூட்டை கிளப்பும் என்று கூறப்பட்டிருந்தது.
இப்போது மீண்டும் ஒரு சூட்டை கிளப்பும் செய்தி வெளியாகியிருக்கிறது. கடந்த வாரம் இந்த படத்துக்காக எடுக்கப்பட்ட ஒரு காட்சி பற்றிய பேச்சுதான் இப்போது கோடம்பாக்கம் முழுக்க பற்றி எரிகிறது. ஆம்! ஒரு பில்டிங் கொழுந்து விட்டு எரிவது போலவும், அந்த தீயில் சிக்கி மூன்று அப்பாவிகள் இறந்து போவதுபோலவும் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு பத்திரிகை அலுவலகம் என்பதுதான் காட்சியின் ஹைலைட்.
இந்த படத்தின் இன்னொரு ஹைலைட் நடிகர் விஜய்யும் ஒரு காட்சியில் வருவதுதான். முதலில் நடிக்க மறுத்த விஜய் இப்போது அப்பாவுக்காக பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார்
No comments:
Post a Comment