"வெண்ணிலா கபடிக்குழு", "நான் மகான் அல்ல" போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன், அடுத்து "அழகர்சாமியின் குதிரை" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஹீரோவாக "வெண்ணிலா கபடிக்குழு" படத்தில் நடித்த அப்பு குட்டி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சரண்யா மோகன் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "அழகர்சாமியின் குதிரை" படம், கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டியது. ஆனால் சில பல பிரச்சனைகளால் இப்படம் தள்ளிக் கொண்டே போனது. இந்நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மதன் வருகிற மே 12ம் தேதி அழகர்சாமியின் குதிரை நிச்சயம் ரிலீசாகும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

No comments:
Post a Comment