சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள பனங்காட்டூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் சங்கர் என்கிற ஜெயசங்கர் (34). இவனுக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்த ஜெய்சங்கருக்கு போதை பழக்கம், மற்றும் பல பெண்களுடன் தொடர்பும் இருந்து வந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு சங்ககிரியை சேர்ந்த ஒரு போலீஸ் ஏட்டுவின் மனைவியுடன் ஜெய்சங்கருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஒரு நாள் அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்து விட்டு தப்பினான். இது தான் ஜெய்சங்கர் செய்த முதல் கொலை, அதன் பின்னர் பெண்களை கற்பழித்து கொலை செய்வதும், கொலை முயற்சிகளில் ஈடுபடுவதுமான வழக்கத்தை தொடர்ந்தான். இவன் மீது சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை, ஆகிய மாவட்டங்களில் பல பெண்களை கற்பழித்ததாக 8 வழக்குகளும், 3 கொலை வழக்குகளும், 4 கொலை முயற்சி வழக்குகளும் மற்றும் கொள்ளை, வழிப்பறி என 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பெண் போலீஸ் ஒருவரை அழைத்து சென்று கற்பழித்து கொலை செய்தான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த மார்ச் 18-ந் தேதி ஜெய்சங்கரை அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு கோவை சிறைக்கு கொண்டு செல்லும் போது சேலம் புதிய பஸ் நிலையத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி கை விலங்கை அவிழ்த்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டான்.
ஜெய்சங்கர் தப்பி ஓடியதால் பயந்து போன போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். . தப்பி ஓடிய காமகொடூரன் பெண்களை வேட்டையாடும் மிருகம் என்பதால் அவனால் தனியாக இருக்கும் பெண்களுக்கு ஆபத்து என்று பயந்து போன போலீசார் தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போலீசாருக்கும் அவனை பற்றிய தகவல்களை போட்டோவுடன் அனுப்பி வைத்தனர். மேலும் தமிழக எல்லையான ஓசூரில் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அவனை பற்றிய அறிவிப்புகள் ஒட்டப்பட்டு அவனை தேடிவந்தனர்.
இதற்கிடையே கர்நாடகா மாநிலம் சித்திர துர்கா மாவட்டத்தில் 3 பெண்கள் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்டனர். தும்கூர் மாவட்டத்தில் ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் காமவெறியன் ஜெய்சங்கர் அங்கு இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து கர்நாடகா மாநிலம் முழுவதும் அவனது போட்டோ பிரசுரிக்கப்பட்ட நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு போலீசார் கண்காணித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை அறிந்த அவனும் தலைமறைவாக இருந்தான். இதற்கிடையே நேற்று இரவு கர்நாடகா மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணியளவில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் ஜெய்சங்கர் சில்மிஷத்தில் ஈடுபட்டான்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவனை பிடித்து தர்மஅடி கொடுத்து ஜோன்சி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை பிடித்து விசாரணை நடத்திய போது காமவெறியன் ஜெய்சங்கர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்தனர்.
இது குறித்து அவர்கள் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஜெய்சங்கர் மீது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கொலை வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக அவனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டோம். மேலும் தமிழகத்தை விட கர்நாடகாவில் தான் ஜெய்சங்கர் அதிகளில் குற்றங்கள் செய்து உள்ளான். ஜெய்சங்கர் மீது கோவை மேற்கு மண்டல பகுதியில் பல போலீஸ் நிலையங்களில் வழக்கு இருப்பதால் அவனை சேலம் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
சேலம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் கர்நாடகாவுக்கு செல்கிறார்கள். போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய குற்றத்திற்காகவும் தமிழகத்தில் உள்ள கொலை, கற்பழிப்பு குற்றத்துக்காகவும் ஜெய்சங்கரை கைது செய்து சேலம் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

No comments:
Post a Comment