பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன் கதாநாயகியாக நடிக்க, நம்மூர் அன்பு பாலா, மனோஜ் கே.ஜெயன், அபர்ணா உள்ளிட்டோர் நடித்து கேரளாவில் சக்கைபோடு போட்டு வரும் "கயம்" படத்தை "தாரம்" எனும் பெயரில் தமிழ்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கலாம்!
அனில் இயக்கத்தில் அந்தமாதிரி படமாக உருவாகி இருக்கும் "தாரம்" தமிழ்படத்தை, தனது ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து, தமிழில் வசனமும் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா, பிரபல வசனகர்த்தா வி.பிரபாகரிடம் "குத்து", "போக்கிரி" உள்ளிட்ட படங்களில் வசன உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் உடையவர், கூடவே 500 படங்களுக்கு மேல் பிரபல நடிகர்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்திருக்கும் டப்பிங் கலைஞரும் கூட! இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறார். ஆர்.பி.பாலாவுடன் இணைந்து தாரம் படத்தை ஏ.ஜவஹர் கார்த்திகேயனும் தியாரித்திருக்கிறார்.

No comments:
Post a Comment