அல்கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து உலகின் டாப் 10 தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் தாவூத் இப்ராகிம் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தை மெக்சிகோவைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ஜோகுயின் எல் சாபோ கஸ்மென் உள்ளா. இந்த இடத்தில் ஒசாமா இருந்தார்.
மும்பையில் 1980-90களில் நிழல் உலக தாதாவாக இருந்த தாவூத் இப்ராகிம் இந்தி சினிமா நட்சத்திரங்களையும், தொழில் அதிபர்களையும், பெரும் செல்வந்தர்களையும், பில்டர்களையும் மிரட்டி பணம் பறித்து வந்தார்.
போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்ட தாவூத் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயோடு இணைந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களிலும் இறங்கினார்.
1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினார். அதில் 257 அப்பாவிகள் பலியாயினர்.
இதையடுத்து துபாய்க்குத் தப்பியோடிய தாவூத் இப்ராகிம் இப்போது ஐஎஸ்ஐயின் பாதுகாப்பில் பாகிஸ்தானில் வசித்து வருகிறார்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் கராச்சி நகரில் தலைமறைவாக இருப்பது இந்திய உளவுதுறைக்கு தெரிய வந்தது. தாவூத் இப்ராகிமை தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால் தங்கள் நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று கூறி வருகிறது.
இந் நிலையில் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட் தாவூதைப் பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியுள்ளது.
தாவூத் இப்ராகிம் மீது இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் கொலை, போதை பொருள் கடத்தல் உள்பட ஆயிரக்கணக்கான வழக்குகள் உள்ளன.

No comments:
Post a Comment