உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு கடந்த 29-ந்தேதி ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் துவங்கியது. கதாநாயகியாக நடிக்கும் தீபிகா படுகோனோவும் இதில் பங்கேற்றார். அப்போது படப்பிடிப்பு குழுவினருடன் ரஜினி சிற்றுண்டி சாப்பிட்டார். இதில் அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டது.
போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு திரும்பியதும் வாந்தி எடுத்தார். இதையடுதது மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் ரஜினியை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அன்று மாலையே டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். டாக்டர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடலில் நீர்ச்சத்து குறைந்ததாகவும் காய்ச்சல் அடிப்பதாகவும் கூறப்பட்டது.
சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் கிஷோர் உள்ளிட் டோர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினிக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், 3 நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந் தர்யா உடன் இருந்து கவ னித்து வருகிறார்கள். ரஜினி உடல்நிலை குறித்து அவரது மகள் ஐஸ்வர்யா ஆஸ்பத்திரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
என் தந்தை ரஜினிக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது. வறட்டு இருமலும் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல் இல்லை. டாக்டர்களின் முழு கண்காணிப்பில் இருக்கிறார். பயப்படும்படி எதுவும் இல்லை. நன்றாக இருக்கிறார்.
பார்வையாளர்கள் சந்தித்தால் நோய் தொற்று ஏற்படும் என்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளோம். யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. முழு ஓய்வு தேவை என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் “ராணா” படப்பிடிப்பு பாதிக்காது. ரத்து செய்யப்படவும் மாட்டாது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறும்.
இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.
அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் கிஷோர் உடன் இருந்தார்.

No comments:
Post a Comment