சென்னை பெண் கொலை வழக்கில் துணை நடிகையின் கணவர் - 2 கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். “மண்டபம்” உள்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாகவும் பணிபுரிந்தார்.
இந்த நிலையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கவிதா (45) என்ற பெண்ணுக்கும் தமிழரசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 8-ந்தேதி தமிழரசன், சினிமா தொழிலில் அவருக்கு உதவியாக இருந்த சிங்கபெருமாள் கோவிலைச்சேர்ந்த துணை நடிகை அலமேலு (35), கவிதா ஆகிய 3 பேரும் சென்னையில் இருந்து காரில் திருமுக்கூடலில் உள்ள பேசும்பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றதாக தெரிகிறது. இதற்கிடையே பழைய சீவரம் - திருமுக்கூடல் சாலை தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் கவிதா கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். கவிதா உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது காப்பாற்ற முயன்றவர்களிடம் தமிழரசன் கத்தியால் குத்தியதாக மரண வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்பட்டது. கொலை குறித்து பால வாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கவிதா கூறிய மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் தமிழரசனை உடனடியாக போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணை யின்போது தமிழரசனிடம் இருந்து வேறு எந்த விபரத்தையும் சேகரிக்க முடிய வில்லை. ஆற்று பாலத்தின் கீழ் நின்ற கவிதாவை ஒரு கும்பல் கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டது என்று மட்டும் கூறினார்.
கவிதா கொலை செய்யப் பட்டது அறிந்ததும் மயங்கி விழுந்த அலமேலுவை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனால் அவரிடம் போலீசார் விசாரிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் அலமேலு சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து தெரியாத நிலையில் கொலையாளிகள் குறித்தும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.
கொலையில் சம்பந்தப்பட்ட தமிழரசன் வேறு எந்த தகவலும் சொல்லாததால் அலமேலு மூலம் துப்பு துலக்க போலீசார் முடிவு செய்தனர். அலமேலுவின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அவரது செல்போனில் இருந்து கணவர் விஜயகுமாருக்கு ஏராளமான போன் கால் சென்றது தெரிந்தது. இவை அனைத்தும் நள்ளிரவில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விஜயகுமாரை விசாரிக்க சென்றனர். அவர் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. அவரை பிடிக்க போலீசார் தேடி வந்தனர். அவர் மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கம் பாலம் அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விஜயகுமாரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையாளிகள் பற்றிய தகவலை தெரிவித்தார். அதன் பேரில் மதுராந் தகம் பைபாஸ் சாலையில் வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டைச் சேர்ந்த ரமேஷ் (26), சபி (24) என்பதும் கூலிப்படையைச் சேர்ந்த இவர்கள் கவிதாவை குத்தி கொலை செய்ததும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, பழைய சீவரம் - திருமுக்கூடல் தரைப்பாலம் அருகே கார் வந்தபோது, தமிழரசன், அலமேலு, அவரது கணவர் விஜயகுமார் ஆகியோர் திட்டப்படி அலமேலு, தமிழரசனிடம் சிறுநீர் கழிகக் வேண்டும் என்று கூறி காரை நிறுத்தினார். காரில் இருந்து இறங்கிய அலமேலு, துணைக்கு கவிதாவையும் அழைத்து கொண்டு பாலத்தின் கீழ் பகுதிக்கு வந்தார்.
அப்போது கவிதாவை தனியாக நிறுத்தி விட்டு அலமேலு சென்று விட்டார். பாலத்தின் தூண் களில் ஏற்கனவே மறைந்திருந்த நாங்கள் கவிதாவை குத்திக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டோம். அதே நேரத்தில் அலமேலுவும், தமிழரசனும், அங்கிருந்து காரில் சென்று விட்டனர். இறக்கும் முன் கவிதா கூறிய தமிழரசன் பற்றிய தகவலால் நாங்கள் சிக்கிக் கொண்டோம் என்று கூறினார். அவர்கள் கூலிப்படையினர் என்பதால் கொலை யின் பின்னணி குறித்து தெரியவில்லை. பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசா ரணை நடந்து வருகிறது. சென்னை பெண் கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.
No comments:
Post a Comment