சிலர் நெகடிவ் பப்ளிசிட்டியை மட்டுமே நம்பி படமெடுப்பார்கள். சில நேரங்களில் அது ஒர்க் அவுட் ஆவதும் உண்டு. சில நேரங்களில் முதலுக்கும் சேர்த்து மோசம் வைப்பதும் உண்டு. ஆரண்ய காண்டம் அப்படியொரு படம்தான் போலிருக்கிறது.
சென்ன 28 தவிர, உருப்படியாக ஒரு படமும் தராத எஸ்பிபி சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜாகிஷெராஃப் நடித்துள்ளார். குமாரசாமி தியாகராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் படம் பார்க்கத் தகுந்ததாக இல்லை என்று தணிக்கைக் குழு கருதியதால் அனுமதி தர மறுத்துவிட்டது.
யதார்த்தம் என்ற பெயரில் வக்கிரமான ஆபாச காட்சிகள், அறுவறுப்பான வசனங்கள் கொண்ட இந்தப் படத்துக்கு அனுமதி தரமுடியாது என தணிக்கைக் குழு பகிரங்கமாகவே கூறிவிட்டது.
மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்தப் படத்தை தூசு தட்டி மேல்முறையீட்டுக்குக் கொண்டு சென்றனர். அவர்களும் இந்தப் படத்தை மிகவும் மோசம் என்று கூறியதோடு, 52 இடங்களில் கத்தரி போட்டு, அரைப் படத்தை ஏ சான்றிதழுடன் கொடுத்துள்ளனர்.
இவ்வளவு மோசம் என கருதப்படும் ஒரு படத்தை வெளியிட்டே தீர வேண்டிய கட்டாயம் என்ன? என்ற கேள்வியோடுதான் இந்த சான்றிதழையே அவர்கள் அளித்துள்ளனர்.
'இந்தியில் இதைவிட மோசமாக படங்கள் வந்தாலும் அனுமதிக்கிறார்கள். இங்குமட்டும் அனுமதிக்க மறுக்கிறார்களே", என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சரண்.
ஆக மோசமான படம் என்று தெரிந்தேதான் இந்த தவறைச் செய்திருக்கிறார்கள்!!
No comments:
Post a Comment