2ஜி ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு டி.வி. உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனர்.
திகார் சிறையில் பெண் கைதிகள் பிரிவில், சிறை எண் 6-க்கு கனிமொழியை பெண் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை, 15-க்கு 10 அடிகள் கொண்ட அறையாகும். அவருக்கு டிவி பார்க்கவும், செய்தித் தாள்கள் படிக்கவும் வசதி உண்டு என்றும், சீலிங் ஃபேன் மற்றும் கட்டிலும் அந்த அறையில் உள்ளது என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார், சிறை எண் 4-ல் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment