இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்ற 11 தொகுதிகளில் 9 இடங்களை தற்போது அதிமுக கைபற்றியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக ஆட்சியில் இருக்கையில் திருமங்கலம், மதுரை மத்தி, மதுரை மேற்கு, பென்னாகரம், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், பர்கூர், வந்தவாசி, இளையான்குடி, திருச்செந்தூர், கம்பம் ஆகிய 11 இடங்களில் இடைத்தேர்தல் நடந்தது. 11 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த 11 தொகுதிகளில் திருச்செந்தூர், கம்பம் தவிர மற்ற 9 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
அந்த 9 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் பின் வருமாறு,
மதுரை மேற்கு- செல்லூர் ராஜு (அதிமுக)
மதுரை மத்தி - சுந்தர்ராஜன் (தேமுதிக)
திருமங்கலம் - முத்து ராமலிங்கம் (அதிமுக)
ஸ்ரீவைகுண்டம் - சண்முகநாதன் (அதிமுக)
தொண்டாமுத்தூர் - வேலுமணி (அதிமுக)
வந்தவாசி - குணசீலன் (அதிமுக)
பென்னாகரம் - நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
இளையான்குடி தொகுதி தற்போது மானாமதுரை தொகுதியாக மாறியுள்ளது. இங்கு குணசேகரன் (அதிமுக) வெற்றி பெற்றுள்ளார்.
திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக)
கம்பம்- ராமகிருஷ்ணன் (திமுக)
No comments:
Post a Comment