அது வேற வாய், இது நாற வாய் என்று வடிவேலு ஒரு படத்தில் பேசுவார். அதேபோல ஆகி விட்டது அமெரிக்காவின் போக்கு.
நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும், மும்பைத் தாக்குதலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கா, இரண்டு தாக்குதல்களையும் ஒரே மாதிரி பார்க்கக் கூடாது என்று வியாக்கியானம் பேசியுள்ளது..
நியூயார்க் நகரில் நடந்த தாக்குதலுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக பல ஆயிரம் பணத்தைக் கொட்டி உலகம் முழுவதும் வலை வீசி தேடி வந்த பின்லேடனை பாகிஸ்தானுக்குள் அத்துமீறி புகுந்து அதிகாலையில் பின்லேடனைக் கொன்று உடலையும் கடலுக்குள் வீசி விட்டுப் போய் விட்டது அமெரிக்கா.
உலகமே இந்த சம்பவத்தைப் பார்த்து அயர்ந்து, அதிர்ந்து போயுள்ள நிலையில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய அதி பயங்கர தாக்குதல் விவகாரத்தை அப்படியே ஓரம் கட்டும் வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.
உங்களைப் போலவே பிற நாடுகளும், குறிப்பாக இந்தியா, தனது மும்பை பயங்கரவாத சம்பவத்திற்குக் காரணமானவர்களை பாகிஸ்தானில் புகுந்து தாக்கும் உரிமை உள்ளதா என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாள மார்க் டோனரிடம் கேட்டபோது, உலகின் மிகவும் தேடப்பட்ட நபர் ஒருவர் தங்கியிருந்த இடத்தில் புகுந்து வேட்டையாடியது அமெரிக்கா மற்றும் உலக வரலாற்றில் முக்கியமானது.
அதேசமயம், செப்டம்பர் 11 தாக்குதலுக்கும், மும்பைத் தாக்குதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இரண்டையும் ஒப்பிட முடியாது.
பின்லேடன் அமெரிக்காவின் நேரடி எதிரி, அவனால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்பதால் சுட்டு வீழ்த்தினோம் என்று கூறியுள்ளார் அவர்.
இதன் மூலம் நாங்கள் மட்டும் எங்கு வேண்டுமானாலும் புகுந்து அடிப்போம், இந்தியாவெல்லாம் அப்படி செய்யக் கூடாது என்று மறைமுகமாக அமெரிக்கா கூறியுள்ளதாக தெரிகிறது.

Ivanga Epppavome Ippadithaan Bossu..
ReplyDelete