பின்லாடன் பதுங்கியிருந்த மாளிகை மீது அமெரிக்க படைகள் நடத்திய ரெய்டு முதல் அவர் கொல்லப்படும் வரை அனைத்தையும் முதன்முதலாக டிவீட்டர் இணையதளம் தான் செய்தி வெளியிட்டது தெரியவந்துள்ளது.
அதன்படி பின்லாடன் பதுங்கியிருந்ததக கூறப்படும் அபோதாபாத் நகரில் குடியிருந்த சோயிப் அக்தர் என்பவர் , தகவல் தொழில்நுட்பம் படித்துள்ளார்.
இவர் சம்பவம் நடந்த தினத்தன்று தனது லேப்டாபில், டிவீட்டர் இணையதளம் வாயிலாக தனது பிளாக்கில் ,சம்பவம் நடந்த தினமான கடந்த ஞாயிறன்று நள்ளிரவு 1 மணியளவில் ஏதோ தன் வீட்டின் மேல் மிகவும் அரிதாக ஹெலிகாப்டர் வட்டமடித்ததாகவும்,
பின்னர் அந்த ஹெலிகாப்டர் பறந்து குண்டு வீசுவதாகவும், சுமார் 40 நிமிடம் ஒயாமல் துப்பாக்கி சத்தமும், குண்டு வீச்சும் நிகழ்ந்ததாகவும், பின்னர் அமைதி ஏற்பட்டதாகவும் , அதிகாலையில் தான் ஹெலிகாப்டரில் குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது.
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை கொல்வதற்கு என்பது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில், நான் கடந்த 5ஆண்டுகளாக டிவீட்டர் இணையதளத்தினை ஆன்லைன் மூலம் பயன்படுத்துகிறேன். சம்பவம் நடந்ததை பார்த்ததைத்தான் எனது நண்பர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தெரிவித்தேன் என்றார்.
மேலும் ஒசாமா கொல்லப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பரவியதும், அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு தெரியப்படுத்தியதும் டிவீட்டர் வாயிலாகத்தான் என தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment