அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையின் நடவடிக்கையில் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் உடல், கடலில் வீசப்பட்டுவிட்டது. அமெரிக்க அதிகாரி தகவல் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதும் அவரது உடலுக்கு இஸ்லாமிய மரபுப்படி இறுதி சடங்கு செய்ததாக அமெரிக்கா அறிவித்தது.
அதன்பிறகு பின்லேடன் உடல், கடலில் வீசப்பட்டுவிட்டது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறும்போது, "பின்லேடன் உடலை எந்த நாடும் இறுதி சடங்குக்காக ஏற்றுக்கொள்ளாது.
மேலும் ஏதாவது ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்தால், மற்ற தீவிரவாதிகள் அந்த இடத்தை தங்கள் தீவிரவாத இயக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்பதால், பின்லேடன் உடலை கடலில் மூழ்கடித்து விட்டோம்.
அது எந்த இடம் என்பதை வெளியிட முடியாது'' என்றார். இந்நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதன் எதிரொலியாக அமெரிக்காவுக்கு எதிராக வன்முறை நடைபெறலாம் என்று அந்நாட்டு அரசு கருதி உள்ளது.
இதனால் வெளிநாட்டில் வாழும் அமெரிக்க மக்களும், உலகம் முழுவதும் செல்லும் அமெரிக்கர்களுக்கும் உஷாராக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்கர்கள் மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதே போல உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment