தலிபான் தீவிரவாத இயக்க தலைவர் முல்லா ஒமர். இவர் ஆப்கானிஸ்தானிலும், அதை தொடர்ந்து பாகிஸ்தானிலும் தலிபான் இயக்கத்தை தொடங்கி அல்கொய்தாவுடன் சேர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2-ந்தேதி அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து பின்லேடனின் கூட்டாளி ஜவாகிரி மற்றும் முல்லா ஒமரையும் அமெரிக்க ராணுவத்தினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் முல்லா ஒமர் பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையில் உள்ள வசிரிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். குவெட்டாவில் இருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு சென்றபோது அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தகவலை ஆப்கானிஸ்தான் டெலிவிஷன் வெளியிட்டது. இதை ஆப்கானிஸ்தானின் உளவு நிறுவனமும் உறுதி செய்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆனால், அவரை கொன்றது யார் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.
ஆனால் முல்லாஒமர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தானின் செக்ரீக்- இ-தலிபான் அமைப்பு மறுத்துள்ளது. குவெட்டாவில் இருந்து வடக்கு வசிரிஸ்தான் சென்றபோது அவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வசிரிஸ்தான் பகுதியில் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றன. அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில்தான் முல்லா ஒமர் கொல்லப்பட்டார் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட முல்லா ஓமர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடத்தியவர். 2001-ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து அவர் தலைமறைவானார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தலிபான் இயக்கத்தை தொடங்கி பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவரை தங்களின் புனித தலைவராக தலிபான்கள் கருதி வந்தனர்.
தலிபான் மறுப்பு
ஆனால் இந்த செய்தியை உடனடியாக தலிபான் அமைப்பு மறுத்து விட்டது. தங்களது தலைவர் பத்திரமான இடத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான அவரது போர் தொடரும் என அந்த அமைப்பு கூறியுள்ளார்.
முல்லா ஒமர் குறித்த செய்திக்கு இதுவரை ஆப்கானிஸ்தானோ அல்லது பாகிஸ்தானோ விளக்கம் அளிக்கவில்லை.
No comments:
Post a Comment