அமெரிக்க படையினரிடம் பின்லேடன் சிக்கியதற்கு அவர் இளம் மனைவி அமல் அல்&சதா காரணமாக இருக்கலாம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
அமெரிக்க உளவுத்துறையினர் அளித்த தகவல் படி, பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்த தகவல் 100 சதவீதம் உறுதி செய்யப்படவில்லை எனவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். பின்லேடன் அமெரிக்க படையினரிடம் எப்படி சிக்கினார் என்பது பற்றி பாகிஸ்தானில் பல கருத்துகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் அளித்துள்ள பேட்டியில்,
’’உறுதியான தகவல் கிடைக்காமல், அமெரிக்கப்படையினர் அபோதாபாத் மாளிகையில் நுழைந்திருக்கமாட்டார்கள்.
பின்லேடன் மாளிகையில் உள்ளவர்கள், அவர்களின் வயது உள்பட அனைத்து குறிப்புகளையும், சீல் பிரிவு கமாண்டோக்கள் விட்டு சென்ற கைடு புத்தகத்தில் உள்ளது.
இளம் மனைவி அமல் அல்&சதா பின்லேடனை காட்டிக் கொடுத்திருக்கலாம் என மற்ற இரண்டு மனைவிகள் குற்றம் சாட்டுகின்றனர். பின்லேடன் பற்றி அவரது வீட்டில் வசித்த ஒரு நபர்தான் நிச்சயம் தகவல் கொடுத்திருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment