ம.தி.மு.க. தொடங்கி 18 ஆண்டுகள் ஆகிறது. இன்று அதன் தொடக்க விழா கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது.
இதையொட்டி அங்குள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ‘’தமிழ்நாட்டின் எதிர் காலத்தை தீர்மானிக்கும் இயக்கமாக ம.தி.மு.க. திகழும். மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு ம.தி.மு.க. தொடர்ந்து பணி யாற்றி வருகிறது.
தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. இதில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று சபதம் ஏற்போம். வரும் காலத்தில் ம.தி.மு.க. மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்’’ என்று கூறினார்.
அவர் மேலும், ‘’இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்து ஈவு இறக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சேவை சர்வதேச குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். சொல்லோனா துயரத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக தமிழ் ஈழம் மலரும்’’ என்று கூறினார்.

No comments:
Post a Comment