தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது என்ற செய்தியை அடுத்து, ரஜினிகாந்த் 13-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் பதில் கடிதம் அனுப்பியதோடு, அப்பொழுதே உடல் நலக்கு றைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்துக்கு பூரண நலம் அடைய வேண்டும் என்ற தனது விருப்பத்தினையும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது, ரஜினிகாந்த் உடல் நலக்குறைவினால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை அடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரஜினியின் மனைவி லதா ரஜினி காந்த்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ரஜினி காந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்தும் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் ஜெயலலிதாவிடம் லதா விளக்கமாக எடுத்துரைத்தார். அனைத்தையும் கேட்டறிந்த முதல்-அமைச்சர் விரைவில் ரஜினி பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக லதாவிடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment