பிரபல காமெடி நடிகர் செந்தில், முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். கவுண்மணியுடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் செந்தில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார். அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகமெங்கும் ஒரு மாதம் பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் செந்திலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூல நோயால் அவதிப்பட்டார். உடனடியாக அவரை அமிஞ்சிகரையில் உள்ள பில்ரோத் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
செந்திலுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது குணமாகி வருவதாகவும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment