தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று கனிமொழி, ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது கனிமொழியிடம் ஒரு பாக்கெட் உலர் பழ வகைகள் மற்றும் ஒரு பாட்டில் ஜூஸ் கொடுக்கப்பட்டது.
கருணாநிதி ஜெயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றதும் கனிமொழி அந்த உலர் பழங்களையும், ஜூஸ் பாட்டிலையும் தன்னுடன் எடுத்துச் செல்ல தயாரானார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. உலர் பழங்களையும், ஜூசையும் அவர்கள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். இது குறித்து திகார் ஜெயில் சட்ட அதிகாரி சுனில் குப்தா கூறுகையில்,
சிறை சட்ட விதிகளின் படி, பார்வையாளர்கள் கொடுக்கும் எந்த பொருளையும் கைதிகள் தங்கள் அறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. கோர்ட்டு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் உணவு மட்டும் கொண்டு செல்லலாம் என்றார். அவர் மேலும் கூறுகையில், கனிமொழி விஷயத்தில், அவரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் கொடுக்கும் உணவை கனிமொழி எடுத்துச் செல்லலாம் என்று கோர்ட்டு எந்த சிறப்பு அனுமதியும் கொடுக்க வில்லை.
எனவே கனிமொழி பழம், ஜூஸ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றார். திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் நீரஜ்குமார் கூறு கையில், ஜெயிலுக்குள் யாரும் வி.ஐ.பி. அல்ல. வி.ஐ.பி.க்கள் கைதிகளாக வரும் போது கோர்ட்டு அனுமதி இல்லாமல் எந்தவித சலுகையும் கொடுக்க மாட்டோம் என்றார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டு உணவை கொடுக்கலாம் என்று கோர்ட்டு அனுமதி கொடுத்துள்ளது. அதுவும் கறி மற்றும் பழ வகைகள் இல்லாமல் கொடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட கஷாப்புக்கு மட்டன் பிரியாணி, கோழி பிரியாணி கொடுத்து ராஜ உபசரிப்பு செய்யும் நீதிமன்றம் கனிமொழோக்கு பழம், ஜூஸ் கொடுக்கவே தடை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தான் தெரியல்ல !
ஐயா நீதிபதி அவர்களே ! பிள்ளை பாவம்ங்க சின்ன வயசில இருந்தே கொள்ளையடிச்ச பணத்தில வித விதமா ஜூஸ் , பழம்னு சாபிட்டு வளர்ந்த பிள்ளைங்க. கொஞ்சம் இரக்கம் காட்டுங்க.... நீங்க அப்படி இரக்கம் காட்டல்லன்னா கஷாப்பை உதாரணமா எடுத்துகிட்டு கொள்ளையடிச்சா இப்படித்தான் பண்ணுவாங்க போல! தீவிரவாத செயல்ல ஈடுப்பட்டா மட்டன் பிரியாணி, கோழி பிரியாணி கொடுபாங்கனு நினச்சு அடுத்து அதையும் செஞ்சுகிட்டு வந்து நிக்க போறாங்க ....
No comments:
Post a Comment