மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படத்தின் ஆடியோ ரிலீஸ் தொடர்ந்து தள்ளி போவதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் மங்காத்தா. அஜீத்தின் 50வது படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இதனிடையே இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தொடர்ந்து தள்ளிகொண்டே போகிறது. முன்னதாக அஜீத்தின் பிறந்தநாளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படத்தில் சூட்டிங் முடியாமல் இருந்ததால் ஆடியோவையாவது ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணியிருந்தனர். ஆனால் சில பல பிரச்சனைகளால் ஆடியோ ரிலீசும் தள்ளிபோனது.
முழு ஆடியோவைதான் ரிலீஸ் செய்ய முடியவில்லை, சிம்புவின் வானம் படத்தை போன்று ஒரு பாட்டையாவது ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்து இரவோடு இரவாக அஜீத்தின் பிறந்தநாளில் ஒரு டிலைர் சாங்கை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில் ஆடியோ ரிலீஸ் ஏன்...? தள்ளிபோனது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுக்கு பேசிய தொகையில் பாதி தொகையை மட்டும் தான் வழங்கியிருந்தனராம். இதனால் மங்காத்தா படத்தரப்பினருக்கும், யுவன் சங்கர் ராஜாவுக்கும் பிரச்சனை என்று கூறப்படுகிறது. முழுதொகையையும் கொடுத்தால் மட்டும் தான் படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்ய விடுவேன் என்று கூறிவிட்டாராம் யுவன். இதனால் தான் ஆடியோ ரிலீஸ் தள்ளிபோனது என்று கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.

This comment has been removed by the author.
ReplyDelete