வானம் படத்தை அடுத்து சிம்பு போடா போடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் சல்மான் கான் நடித்த டபாங் ரீமேக் படத்தில் நடிக்க ஒப்பந்தம் இருந்தார்.
இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் இயக்குனர் சிலம்பாட்டம் சரவணன் மற்றும் தரணி ஆகிய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் தரணி முடிவாகியுள்ளார்.
படத்தின் நாயகியாக இந்தி திரையுலகில் முன்னணி நாயகி ஒருவர் தான் வேண்டும் என்று சிம்பு கூறி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் படத்தின் நாயகியாக தெலுங்கில் முன்னணி நாயகியான ரிச்சா என்பவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு, மணிராஜ் கலை இயக்குனர், தமன் இசை என ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
இப்படத்திற்கான பூஜை 9ம் தேதி ஏ.வி.எம் விநாயகர் கோவிலில் வைத்து நடைபெற உள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி டபாங் படத்தின் தயாரிப்பாளரும் சல்மான்கான் சகோதராரும் ஆன அர்பாஸ் கான் கலந்து கொள்கிறார்.

No comments:
Post a Comment