கணக்கு வரலையே! நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், பெள்ளி வேட்பாளராக போட்டியிட்டார். அவரிடம் வைட்டமின், "ப' பற்றாக்குறை இருந்ததால், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர், தேர்தல் பணியில் வேகம் குறைத்தனர். தேர்தலில் கடைசி நேர செலவுக்காக, கணிசமான தொகையை, அ.தி.மு.க., தலைமை வழங்க, கட்சி நிர்வாகிகள் பெள்ளியை, "அட்டையாய்' ஒட்டி, தேர்தல் பணி பார்த்தனர். ஓட்டுப்பதிவுக்கு இரு நாட்கள் முன்பு, தான் கொடுத்த பணத்துக்கு கணக்கு வரவில்லை என, பெள்ளி ஒரு குண்டை தூக்கிப் போட, அ.தி.மு.க.,வினர் ஆடிப்போயினர். இது தலைமைக்கு புகாராக போனால், எதிர்காலம் புதிராகும் என்ற பயத்தில், கையிருப்பில் பதுக்கி வைத்திருந்த கணிசமான தொகையை, பூத்தில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கி, அதற்கான கணக்கையும் பெள்ளியிடம் ஒப்படைத்துள்ளனர்
No comments:
Post a Comment