"வெண்ணிலா கபடிகுழு", "நான் மகான் அல்ல" போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் அடுத்து இயக்கி வெளிவந்திருக்கும் படம் தான் "அழகர்சாமியின் குதிரை". காணாமல் போகும் குதிரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், 2005ம் ஆண்டில் பாஸ்கர் சக்தி ஒரு வார இதழில் எழுதிய கதையே இப்போது படமாக வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., நடித்த மலைக்கள்ளன் படத்திற்கு பிறகு, மல்லையாபுரம் சென்ட்ரல் ஸ்டேஷன் போன்ற இடங்களில் சூட்டிங் நடத்தியிருக்கின்றனர்.
படம் ரொம்பவே எளிமையாக எதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக ரூ.1லட்சத்திற்கு மேல் புதிய உடைகளை அந்த கிராமத்து மக்களுக்கு வாங்கி கொடுத்து, அவர்கள் பயன்படுத்திய பழைய உடைகளை வாங்கி படப்பிடிப்புக்கு பயன்படுத்தியுள்ளனர். படம் முழுக்க பசுமை போர்த்திய காட்சிகளை இதயத்தை இதமாக்கியிருந்தாலும், இசைக்சேர்ப்புக்கு ஹங்கேரியில் இருந்து 5பேரை வரவழைத்து பின்னணி இசையை பின்னி எடுத்தி விட்டாராம் இசைஞானி இளையராஜா.

No comments:
Post a Comment