தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கிறது. இதற்கிடையில் பல கருத்துக்கள் இவர் தான் அடுத்த முதல்வர் என்று ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்துக்கு சொல்லிட்டு இருக்காங்க. இதுல செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்புக்கள் வேறு . பாவம், வேட்பாளர்களின் நிலைமை தாங்க ரெம்ப பரிதாபம்! இந்த ஒரு மாதத்தில் ஒழுங்கா சாபிட்டு இருப்பாங்களா....! ஒழுங்கா தூங்கி இருப்பாங்களா..! எல்லாம் கஷ்டம்ங்க. எல்லாம் நாளைக்கு தெரிஞ்சிடும் தான்.
ஆனா, இப்போ வெளியாகி இருக்கும் தேர்தலுக்கு முந்தைய , தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பது கேள்விக்குறியே ! கருத்துக்கணிப்புகள் என்பது சில ஆயிரம் பேர்களிடம் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள். போன்ற கருத்துக்களை கேட்டு அதன் படி தெரிவிக்கப்படுவது தானே! கோடி கணக்கான வாக்காளர்களின் மனநிலையை சில ஆயிரம் பேர்களால் எப்படி பிரதிபலிக்க முடியும் !
இந்த தேர்தலை பொறுத்தமட்டில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை சொயல்வது சற்று கடினமானது என்று தான் பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. சில கருத்துகணிப்புகள் ஆளும் திமுக தான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும், சில கருத்துக்கணிப்புகள் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும். ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக தான் தெரிவிக்கிறது. சரி, எல்லாவரும் சொல்லிடாங்க நாமும் நம்ம பங்குக்கு சொல்லாம இருந்தா அரசியல் குத்தம் ஆகிடாதா என்ன? ! அதாங்க நாமும் சொல்லலாம்ன்னு தான்.
வெற்றி யாருக்கு
என்னை பொறுத்தமட்டில் இந்த தேர்தலில் கூட்டணிகளின் வாக்கு வங்கி என்பது சும்மா பட்டாசுத்தான், ஏன்னா இந்த காங்கிரஸ் பெயரியக்கத்திற்கு 63 தொகுதியில நிக்குற அளவுக்கு தொண்டர்கள் இருக்காங்களா ? இல்லையா என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இல்லையா!. எனவே இந்த கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி எல்லாம் சுவிஸ் வங்கியில் இருக்கும் பணம் மாதிரித்தான் 'வரும் . ஆனா...வராது'
அப்படியானால் கட்சிகள் பெறும் வாக்குகள் எந்தவகையில் அவர்களுக்கு கிடைத்திருக்கும், மக்கள் எதை அடிப்படையாக வைத்து வாக்களித்திருபார்கள். அந்த அடிப்படையில் யார் வெற்றி பெறுவார்கள்?
மக்கள் காத்திருந்த தேர்தல்
இந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் எதிர்ப்பார்த்திருந்த தேர்தல்! ஊழலுக்கும் , ஆளும் குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் இருத்து விடுப்படவும், பதவிக்காக கூட்டிக்கொடுக்கும் (எழுத்துபிளைங்க 'காட்டிகொடுக்கும்' ன்னு தான் சொல்ல வந்தேன்). சதிகார சுயநல கூட்டத்திற்கு முடிவு கட்டுவதற்காக எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் தான் இந்த தேர்தல். ஆனால், அரங்கேறிய நாடகங்களும் கூத்துக்களும் வேறுமாதிரி அமைந்துவிட்டது.
இந்த தேர்தலில் ஒரு ஒத்த சிந்தனையோடு இருந்த மக்களை அப்படி அதே சிந்தனையோடும் அதே முடிவோடும் இருப்பதற்கு ஆளும் கட்சி விடவில்லை... எதிர்கட்சியும் ஆளும் கட்சிகளின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை வளர்த்து கொண்டு அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தவறி விட்டது மட்டுமின்றி. இரு கட்சிகளும் இலவசங்களை மனம் போன போக்கில் அறிவித்து மக்களின் சிந்தனையை வேறுதிசைக்கு திசை மாற்றி விட்டன. என்றால், இன்னொரு பக்கம் வடிவேலுவின் யதார்த்தமான, பாமரத்தனமான பேச்சுக்களும் அதற்கு மீடியாக்கள் கொடுத்த முக்கியத்துவமும் இமாலய ஊழலான 'ஷ்பெக்ட்ராம்' ஊழலையே மறக்க செய்துவிட்டது.
இப்போது மக்கள் முன் நின்றது யாருக்கு வாக்களித்தால் இலவசங்கள் கிடைக்கும் என்பது தான். இதற்கு ஜெயலலிதாவா? , கருணாநிதியா? இதில் சந்தேகத்திற்கு இடமின்றி மக்கள் மனதில் தோன்றியவர் கருணாநிதி தான். அவர் தானே இலவசங்களின் ராஜா !
இலவசங்களுக்கு அடுத்த இடம் வாக்குக்கு காசு! ஏழை பாமர மக்களின் வாக்குகளை பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் கையாண்ட எளிய முறை காசு கொடுத்து வாக்கை பெறுவது தான். தேர்தல் கமிசன் திறமையாக செயல் பட்டது என்று அனைத்து தரப்பினரும் பாராட்டினாலும் உண்மை அதுவல்ல. 1,௦௦00,000 ரூபாயை ஒருவரிடம் கொடுத்து விட்டு அவரை அவர்களே தேர்தல் கமிசனிட காட்டி கொடுத்து அவர்களை திசை திருப்பி விட்டு, அடுத்த பாதையில் கோடிகள் மிகவும் எளிதாக கைமாறியது. என்றால் , அடுத்தப்பக்கம் பிரசாரத்துக்கு வரும் தலைவர்களே பணத்தை எடுத்து வந்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தனர்.
இந்த கொடுமையிலும் படித்த படிப்பறிவுள்ள மக்கள் தெளிவாகவே இருந்தனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும். என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில். ஆனாலும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதங்களை வைத்து பார்க்கையில் ஆண் வாக்காளர்கள் , பெண் வாக்காளர்கள் என்று பார்க்கையில் பெண் வாக்காளர்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர். இது இலவசங்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் என்பதில் சந்தேகமே இல்ல. அடுத்ததாக நகரபுற மக்களை விட கிராமப்புற மக்களே அதிகளவில் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். இது இலவசங்களுக்கும், காசுக்கும் விலைப்போனவர்களால் தான் இந்த அளவுக்கு கிராமப்புற வாக்கு சதவீதம் அதிகரித்ததற்கு காரணம்.
இந்த அளவுக்கு படிப்பறிவு குறைந்த கிராமப்புற மக்கள் வாக்களித்தில்ளத்தால் இந்த தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது. திமுக கணிசமான தொகுதிகளை பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பே பிரகாசமாக உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு சற்று குறைவான அளவு வெற்றி பெற்றிருந்தால் கூட மிக மிக எளிதாக வெற்றி பெற்ற மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விடும் அளவுக்கு அசாத்திய திறமையும் திமுக விடமே அதிகம் உள்ளதால் எப்படியும் அட்சி அமைக்க போவது திமுக தான் என்றே தோன்றுகிறது.
ஆமா..., அப்போ நம்ம விஜய் நிலைமை .....?


No comments:
Post a Comment