விசாகப்பட்டினத்தில் சுரங்கப் பிரச்சனை தொடர்பாக சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ ஒருவர், பழங்குடியின மக்களால் அடித்து விரப்பட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சோமா என்கிற எம்எல்ஏ, பழங்குடியின மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த பழங்குடியின மக்கள் எம்எல்ஏவை ஓட ஓட விரட்டி அடித்தனர். எம்எல்ஏவின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டனர். மேலும் வாகனங்களையும் பழங்குடியின மக்கள் தீ வைத்து எரித்தனர்.
எம்எல்ஏ ஒருவரை அடித்து ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment