விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, May 11, 2011

    பல்வேறு செய்தி நிறுவனங்களின் கருத்துகணிப்பு முடிவுகள்


    தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக கணித்துக் கூற பிரபல செய்தி சேனல் நிறுவனங்களிடையே பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.

    நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது.

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் நக்கீரன் சர்வே தவிர, பிற கருத்துக் கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பில் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

    இதற்கிடையே பல்வேறு செய்திச் சேனல்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து வந்தன. நேற்று மாலை வரை தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.

    சிஎன்என் - ஐபிஎன்:

    முதல் கட்டமாக சிஎன்என் -ஐபிஎன் - தி வீக் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 132 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 70 தொகுதிகளில் 4167 வாக்காளர்களைச் சந்தித்து இந்த எக்ஸிட் போலை நடத்தியுள்ளது சிஎன்என் ஐபிஎன் - திவீக் குழு.

    இவர்களில் 68 சதவீதம் வாக்காளர்கள் திமுக ஆட்சி திருப்தியாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் அதிருப்தி என கூறியுள்ளனர்.

    திமுக ஆட்சியில் சாலை வசதி மேம்பட்டிருந்ததாக 82 சதவீதத்தினரும், குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டதாக 76 சதவீதத்தினரும், கல்வி விஷயத்தில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 77 சதவீதத்தினரும், அரசு மருத்துவமனை செயல்பாடு திருப்தியாக இருந்ததாக 70 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

    மின்சார வசதி நன்றாக உள்ளது என 52 சதவீதத்தினர் கருத்து கூறியிருந்தனர். 48 சதவீதத்தினர் மோசம் என்று கூறியிருந்தனர்.

    அதேபோல சட்டம் ஒழுங்கு குறித்தும் 60 சதவீதத்திற்கு உட்பட்டவர்கள்தான் திருப்தி தெரிவித்திருந்தனர்.

    கருணாநிதிக்கு ஆதரவு:

    யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

    யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.

    அதேசமயம், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் யார் என்பதில் கருணாநிதியை விட ஜெயலலிதாவுக்கு 5 சதவீத ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது.

    யார் ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் அதிகம் என்ற கேள்விக்கு கருணாநிதி ஆட்சியில் என 47 சதவீதத்தினரும், ஜெயலலிதா ஆட்சியில் என 18 சதவீதத்தினரும் கூறியிருந்தனர்.

    2 ஜி விவகாரம்...

    2 ஜி முறைகேட்டை இந்த தேர்தலை பாதிக்கும் விஷயமாக 6 சதவீதத்தினர்தான் எடுத்துக் கொண்டதாக இந்த கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 2ஜி காரணமாக தனது வாக்கை அதிமுக அணிக்கு போட்டதாக 7 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர்.

    இந்த ஊழலுக்கு யார் முக்கிய காரணம் என்ற கேள்விக்கு 53 சதவீதத்தினர் ஏ ராஜா என்றும், 48 சதவீதத்தினர் கனிமொழி என்றும் கூறியிருந்தனர். 34 சதவீதத்தினர் கருணாநிதியையும் 32 சதவீதத்தினர் தயாளு அம்மாளையும் காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

    மேற்கு வங்கத்தில் முடிவுக்கு வரும் கம்யூனிஸ்ட் ஆட்சி...

    மே வங்க மாநிலத்தில் 35 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் 169 தொகுதிகள் வரை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

    அஸ்ஸாமில் மீண்டும் தருண் கோகாய் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும், கேரளாவில் அச்சுதானந்தனே மீண்டும் முதல்வராக வர மக்கள் விரும்புவதாகவும் இந்த சேனல் தெரிவித்துள்ளது.

    ஹெட்லைன்ஸ் டுடே:

    திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

    இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி - 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஆட்சியைப் பிடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    நியூஸ் எக்ஸ்:

    நியூஸ் எக்ஸ் சேனல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 64 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த கணிப்பு முடிவு வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது இந்த சேனல். 2 ஜிதான் திமுகவுக்கு பெரும் வீழ்ச்சி என்று கூறியது இந்த சேனல்.

    ஸ்டார் நியூஸ் - நீல்சன் கணிப்பு:

    ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.


    Posted by விழியே பேசு... at 1:07 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. gomaMay 11, 2011 at 5:48 PM

      யார் வென்றாலும் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்புதான்.
      கருத்துக்கணிப்பு எவ்வள்வுதூரம் சரியாகப் படும் என்பதுதான் புரியவில்லை.யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பிரபலத்தின் ஓட்டு எதிர்பாராத சின்னத்தில் விழுந்திருக்கிறது...இது போல் எத்தனையோ

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ▼  May (668)
      • காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்
      • ஹன்சிகா புது முடிவு!
      • தெய்வ திருமகன் - புத்தம் புதிய டிரெய்லர்
      • ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி : சிறுநீரகத்தை தானமாக...
      • ராம்சரண் தேஜாவுக்கு மாமியாரா...? மீனா மறுப்பு!
      • முதன் முதலாக விக்ரம்!
      • அஜீத்தின் மங்காத்தா ரிலீஸ் தியதி !
      • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : தயாநிதி மாறன் மீது பாரத...
      • நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!
      • வைரமுத்து தூக்கி நிறுத்தும் 'சேவற்கொடி'
      • இசைப்ரியா எப்படி கற்பழிக்கப்பட்டாள் : வைகோ வெளியிட...
      • போர்க்குற்றத்தை நிரூபிக்க இறுதிக்கட்ட போர் வீடியோ ...
      • செலவு மேல் செலவு திணறும் சிம்பு படம்!
      • அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கடலில் கோட்டை கட்டுவ...
      • அமைச்சர் மரியம்பிச்சை மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசா...
      • வடிவேலுவை சீண்டிய விவேக்
      • இன்று விஜய் கொண்டாடிய பிறந்தநாள் விழா!
      • மருத்துவமனையில் ரஜினி முணுமுணுப்பு :'நான் ஒண்ணுமே ...
      • ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...
      • செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற...
      • தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக தமிழக அரசு 680 கிலோ...
      • கனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு
      • ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி மு...
      • கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த எஸ்.எம்.எஸ்.
      • பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்..சொன்னதை செய்...
      • முன்னாள் கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம்-வனிதா கைத...
      • சினிமாவால் பாதிப்பு! முன்னாள் முதல்வர் வேதனை!!
      • தி.மு.க.,வுக்கு மாற்றாக ஏற்பாடுகள்: எதற்கும் எப்போ...
      • பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்
      • அரசு பணத்தில் ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டேன்: வி...
      • மம்முட்டிக்கு ஜோடியான மிஸ் இந்திய அழகி!
      • கமலின் விஸ்வரூபத்தில் ஸ்ரேயா...?
      • விக்ரமிற்கு டாக்டர் பட்டம்: போட்டோக்கள்
      • பிஸியான அனுயா!
      • மரியம்பிச்சை மரணம்: விபத்துக்கு காரணமான லாரி பிடிப...
      • சீமானின் பகலவன் படத்தில் விஜயின் ஜோடி ?
      • சூர்யா காலில் விழும் விஷால் ஆர்யா? -ரசிகர்களுக்கு...
      • ஜெயலலிதாவின் புதிய முடிவால் அதிர்ச்சியில் விஜய்
      • டெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவை...
      • மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிக...
      • 'காங். சரிவுக்கு இந்திரா காந்தியே காரணம்'
      • ஆஸ்கார் விருதை ஏ.ஆர்.ரகுமான் நான் பணம் கொடுத்து வா...
      • ரஜினிக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை;...
      • அம்மா புகழ் பாடும் விஜய் :"அம்மா ஆட்சி அமைய அணிலாக...
      • அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி
      • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினியின் தற்போதைய உட...
      • ஹீரோவாகிறார் நமீதா!
      • ஆடுகளத்துக்கு 6 விருதுகள் நியாயமா...? -வெற்றிமாறன்...
      • அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை
      • திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி
      • முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்
      • ஒரு கோடி சம்பளம்... சந்தர்ப்பவாதியான நடிகை!
      • அவன் இவன் - வேங்கை இரண்டையும் கைவிட்ட சன்!
      • ஜெயலலிதாவை ஈழத்திற்கு வரவழைக்க இலங்கை திட்டம்?
      • தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன்: வெற்றிமாறன்
      • அதிமுக அரசின் சா(சோ)தனைகள் : மதிமுகவினர் ஒட்டிய போ...
      • மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்ன...
      • அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் க...
      • விஜய் அப்பாக்கு கோர்ட் தடை!
      • நான் விலைமாதா தான் ஆவேன்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!
      • முதல்ல விக்ரம்; அப்புறம் சிம்பு: தீக்ஷாவுக்கு அடுத...
      • பியாவுடன் விஜய் காதல்?
      • நாற்பதை தொட்ட த்ரிஷா...!
      • எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருக்கிற அரசியல் சக்தி ரஜி...
      • கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
      • ஹஸன் அலியுடன் நெருக்கமாக இருந்த ஜெயப்ரதா, அமர்சிங்!
      • ஜெ.வை கொல்ல சதியா? -மனம் திறக்கும் புலிகள்!
      • ஜெ. உத்தரவு-செருப்பு போட ஆரம்பித்தார் அமைச்சர் உதய...
      • சோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற...
      • கமிஷனர் அலுவலகத்தில் உண்ணாவிரதமிருக்க வனிதா முயற்சி!
      • ரசிகர்களுக்காக ரஜினி பேசிய உருக்கமான பேச்சு - ஆடிய...
      • ரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா?-டாக்டர...
      • சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரஜினியைக் காண குவிந்...
      • தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நில...
      • என் ரஜினியைப் பார்க்க முடியாதா? -துடித்த கமல்! .. ...
      • ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... ; பரபரப்...
      • பாக்கணும் போல இருக்கு!
      • உரசிய ரசிகர்கள்! உர்ர்ரான அனுஷ்கா!!
      • மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கு ஜிக்கா பாடல்
      • ரஜினி சிங்கப்பூர் செல்வது ஏன்?
      • தயாரிப்பாளருக்கு தெரியாமல் படத்தை விற்ற ஹீரோ!
      • ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறார் ரஜினி : முகம...
      • அநாகரிகத்தில் 6 படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்க...
      • ரஜினிகாந்த் முகம்காட்டுவாரா? : மீடியாக்கள் பரபரப்பு
      • போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் : பத்திரிகைகாரர்கள் கு...
      • சல்மான்கானை முத்தமிட்டேனா? -அசின்
      • பெங்களூர் மைதானத்தில் ஆபாசமாக முத்தமிட்டார்: தீபிக...
      • எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-...
      • புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்
      • சட்டசபை தேமுதிக குழுத் தலைவராக விஜயகாந்த் அறிவிப்பு
      • 5 மாணவிகள் முதல் இடம்; 11 பேர் 2-ம் இடம், 24 பேர் ...
      • ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை?
      • சன் டிவி நிறுவனத்தின் லாபம் ....?!
      • கையில இலவச டிவி 'டோக்கன்'- வாயில 'அல்வா'?
      • 'ஸ்விட்ச் ஆப்' ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி!
      • தாவூத் 'காதலி' இலியானா?!
      • ஹிட்லரின் 'பேசும் நாய்கள்'!
      • 2011-2012ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவ...
      • 29 இடங்களில் வெற்றி: தே.மு.தி.க.வுக்கு அரசியல் கட்...
      • பகலில் கொலை-இரவில் எரிப்பு-வலம் வரும் திகில் கும்பல்!
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.