பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்துக்கு தெரியாமலேயே அந்த நாட்டுக்குள் புகுந்து அமெரிக்க ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தினர். இதனால், உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.
இதற்கிடையே, இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், `பின்லேடனை கொல்ல அமெரிக்க சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலை போலவே தாக்குதல் நடத்தும் சக்தி இந்திய ராணுவத்துக்கும் உள்ளது' என தெரிவித்தார்.
இந்தநிலையில், பின்லேடனை சுட்டுக்கொல்ல அமெரிக்கா நடத்தியது போலவே தன்னிச்சையாக தாக்குதல் நடத்த இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகள் முயற்சித்தால் பயங்கரமான பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

No comments:
Post a Comment