ஆந்திராவிலும், தமிழகத்திலும் அனுஷ்கா நடித்து வெளிவந்து சக்கைபோடு போட்ட "அருந்ததீ" படத்தில் சின்னவயது அனுஷ்காவாக நடித்தவர் திவ்யா நாகேஷ். இவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்தான் நாளை(06.05.11) தேதியன்று அன்று வெளிவர இருக்கும் "பாசக்கார நண்பர்கள்" திரைப்படம். அஜ்மல்கான் எனும் புதுமுகம் கதாநாயகராக நடித்துள்ள "பாசக்கார நண்பர்கள்" படத்தை தயாரித்து, இயக்கியுள்ள பெரோஸ்கான் வேறு யாருமல்ல, "தம்பி அர்ஜூனா" எனும் பெயரில் ரமணா நாயகராக நடித்து ஆறுமாதங்களுக்கு முன் திரைக்கு வந்த தமிழ்படத்தில் ரமணாவின் அண்ணன் தர்மராகவும், அந்தபடத்தின் புரடியூசராகவும் அவதாரம் எடுத்த பிரபல தொழில் அதிபர்தான் பெரோஸ்! அதுமட்டுமல்ல, "பாசக்கார நண்பர்கள்" படத்தில் பாக்ஸிங் வீரராக அறிமுகமாகும் அஜ்மல்கானின் அப்பாவும் இந்த பெரோஸ்கான் தான்.
"தம்பி அர்ஜூனா"வில் அப்பா அறிமுகம், "பாசக்கார நண்பர்கள்" படத்தில் பிள்ளை அறிமுகமா...?!

No comments:
Post a Comment