சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் போலீசார் நுழைய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் உல்லாசமாக இருந்த காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளிவந்து பொது மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாமியார் நித்தியானந்தாவிற்கு சொந்மான ஆசிரமம் பெங்களூரில் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பல்வேறு செக்ஸ் லீலைகளும், முறைகேடுகளும் நடந்தள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், இது குறித்து விசாரணை நடத்த கர்நாடகா டி.எஸ்.பி. ராமலிங்கப்பா நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி கர்நாடக டி.எஸ்.பி. ராமலிங்கப்பா, சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றார். ஆனால் அவரை நித்தியானந்தா சீடர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மகா நித்தியசதானந்தா என்ற பக்தையிடம் கையெழுத்து பெற வந்துள்ளதாக கூறினார்.
அப்போது அவரிடம் வாரண்ட் இருக்கிறதா என கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்தனர். மேலும், அது போன்ற பெயரில் பக்தை இங்கு இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், இது குறித்து சாமியார் நித்தியானந்தா தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அன்தபடி, சாமியார் நித்தியானந்தாவுக்கு சொந்மான ஆசிரமத்தில் போலீசார் நுழைய கர்நாடாக உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

No comments:
Post a Comment