ஒசாமா பின்லேடன் என்ற பயங்கரவாதியை உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியதே அமெரிக்காதானே. அதை அந்த நாடு மறந்து விட்டதா என்று அமெரிக்காவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானி.
இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், அல் கொய்தா தலைவரான பின்லேடனின் வளர்ச்சிக்கு யார் காரணம்?. மற்றவர்களின் தவறுக்காக, எங்களது கொள்கைகளை தவறு என்று யாரும் கூற முடியாது.
Read: In English
அல் கொய்தா பிறந்த இடம் பாகிஸ்தான் அல்ல. நாங்கள் பாகிஸ்தானுக்கு வருமாறு பின்லேடனை அழைக்கவில்லை. ஆப்கானிஸ்தானும் அழைக்கவில்லை. அவர் எப்படி இந்தப் பிராந்தியத்திற்கு வந்தார் என்பதை உலகம் அறியும். வரலாறு தெரிவிக்கும்.
உலக அளவிலான உளவுத் தோல்வியே பின்லேடனின் இருப்பிடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம். அதேசமயம், ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்குள் எந்தப் பிரச்சினையும், பூசலும் இல்லை என்றார் கிலானி.

No comments:
Post a Comment