கடந்த 13-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா துறையினரும் அவரது குடும்பத்தாருடன் ஆர்வமுடன் விசாரித்து வருகின்றனர். கடந்த 13-ந் தேதி குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியும், ஆந்திர தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ரஜினியை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து உடல் நிலை குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் இன்று தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

No comments:
Post a Comment