மாலையாளத்தில் பார்த்திபன், சுரேஷ கோபி, நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில், புதுமுக இயக்குநர் மாதவ் ராமதாஸ் இயக்கத்தில், கடந்த வாரம் ரிலீசாகி பரபரப்பாக ஓடிக் கொண்டு இருக்கும் "மேல்விலாசம்" படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. ராணுவ கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு ராணுவ வீரனைப் பற்றிய படம் தான் மேல்விலாசம். முழுக்க, முழுக்க ராணுவ வீரனை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை கோர்ட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தில் பார்த்திபனின் கேரக்டர் பெரிதும் பேசப்படுகிறதாம். மேலும் வித்யாசமான கதையம்சம் உள்ள படமான இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆகையால் இப்படத்தை தமிழிலும் ரீ-மேக் செய்ய தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். படத்தில் இன்னொரு ஹைலைட் கதாநாயகி கிடையாது என்பதுதான்.

No comments:
Post a Comment