"அத்திலக்கா பத்திலக்கா ஊரான் தோப்பு பப்பாளிக்கா கிச்சிலிக்கா கிச்சிலிக்கா காய்ச்சிருக்கு வெள்ளரிக்கா..." இப்படி ஒரு பாடல் தொடங்கித் தொடருவது கே.வி.எஸ். திரைக்கூடம் உருவாக்கும் "அழகின்பொம்மி" எனும் திரைப்படத்திற்காக... முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனத்தை எழுதி இயக்குகிறார் ஆர்.கே.விஜயகுமார்.
ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்து தேனி, கம்பம் மலைக்கிராமங்களில் நடைபெறும் "அழகின் பொம்மி" திரைப்படத்திற்கு ஆர்.எச். அசோக் ஒளிப்பதிவு செய்கிறார். கலைப்பணியை புவனா செய்ய, டைகர் சுகு சண்டைப்பயிற்சி அமைக்கிறார். எல்லாம் சரி மேற்படி பாடலை யார் எழுதியது? இசையமைத்தது என்பது தானே உங்கள் கேள்வி...? அத்திலக்கா பத்திலக்கா... பாடலை கவிஞர் ஜெயமுரசு எழுத, இளையராஜாவின் பெண் வாரிசு பவதாரணி இசையமைத்திருக்கிறார்.
எல்லாம் சரி இந்தபாடல் வரிகளுக்கு என்ன அர்த்தங்க...?!

பவதாரிணி என்ன ஔவையாரா?’இத்திரிக்கா கவிஞர் ஜெயமுரசு என்ன வள்ளுவரா?
ReplyDeleteஅவரவர் திறமை புலமைக்கு இப்படித்தான் அத்திலிக்கா இத்திலிக்கா ...என்று அமையும்.
நாட்டில் கவனிக்க வேண்டிய நல்ல விஷயங்கள்,தீர்க்க வேண்டிய நியாயமான பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன