அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதை தொடர்ந்து அந்த அமைப்பின் புதிய தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அல்- கொய் தாவின் புதிய தலைவராக அய்மான் அல் ஜவாகிரிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவரை இந்த அமைப்பின் அனைத்து பிரிவு தலைவர்கள் ஏகமனதாக ஆதரிக்கிறார்கள். ஏனெனில் பின்லேடனுக்கு அடுத்த இடத்தில் துணை தலைவராக அல்-ஜவாகிரி இருந்தார் அவர் எப்போதும் பின் லேடனுடன் அவருக்கு வலதுகரமாக செயல்பட்டார்.
மேலும் அவருக்கு நம்பிக்கைக்குரியவராக செயல்பட்டார். எனவே, அனுபவமும், திறமையும், தகுதியும் படைத்த இவரே அல்-கொய்தா இயக்கத்துக்கான தலைவராக திகழ முடியும் இவரால்தான் இந்த இயக்கத்தை மீண்டும் வழி நடத்தி செல்ல இயலும் என கருதுகின்றனர்.
ஆனவே, ஜவாகிரி அல்-கொய்தா தீவரவாத இயக்கத்தினர் தலைவராக விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவாகிரி எகிப்தை சேர்ந்தவர். அவருக்கு தற்போது 59 வயதாகிறது.

No comments:
Post a Comment