தேர்தல் முடிவுகள் குறித்து எங்களுக்கு எந்தப் பதட்டமும், கலக்கமும் உள்ளன. ஆனால் அதிமுகவும், திமுகவும்தான் கலக்கத்தில் உள்ளன என்று கூறியுள்ளார் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்.
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை கடந்த முறையைப் போலவே இந்த முறையும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மீண்டும் சிறுபான்மை பலத்துடன்தான் ஆட்சி அமையும். பெரும்பாலும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளது.
முடிவுகள் குறித்து திமுகவும் சரி, அதிமுகவும் சரி, இரண்டு பேருமே கலங்கிப் போய்க் காத்திருக்கின்றனர். ஆனால் எங்களுக்கு எந்தப் பதட்டமும், கலக்கமும், அச்சமும் கிடையாது.
பத்து தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையி்ல நாங்கள் உள்ளோம் என்றார் கணேசன்.

No comments:
Post a Comment